standardised

அய்யனார் விஸ்வநாத்

From Tamil Wiki
Revision as of 22:43, 18 May 2022 by Manobharathi (talk | contribs)
அய்யனார் விஸ்வநாத் - புகைப்படம்: நௌஃபல்

திருவண்ணாமலையைச் சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் ஆகிய முப்பரிமாணப் புனைவுத் தளத்திலும் விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என அ-புனைவுத் தளத்திலும் எழுதி வருபவர். மலையாள திரைப்படங்களிலும் சர்வதேச மாற்றுத்திரைப்படங்களிலும் திரைக்கதைகளில் பணியாற்றியுள்ளார்.

பிறப்பு, கல்வி

1980-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி விஸ்வநாதன் மற்றும் பூங்கோதை தம்பதியினரின் இளைய மகனாக திருவண்ணாமலையில் பிறந்தார். மூத்த சகோதரர் ரமேஷ் பெங்களூரில் கணினி மென்பொருள் மேலாளராகப் பணிபுரிகிறார். மூத்த சகோதரி கெளரி பள்ளி ஆசிரியை. பள்ளிப் படிப்பை திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் இயந்திரவியல் பட்டயப் படிப்பை கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்தார். பிறகு இயந்திரவியல் பொறியாளராக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு 2006-ஆம் வருடம் வேலை நிமித்தமாக ஷார்ஜாவுக்கு குடிபெயர்ந்தார். 2008-ஆம் வருடத்திலிருந்து துபை அரசு நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாண்மைத் துறையின் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

தனிவாழ்க்கை

ஏப்ரல் 16, 2008-ல் கல்பனாவை திருமணம் செய்து கொண்டார். கல்பனா துபையில் ஒரு பள்ளியில் தனித்துவமான குழந்தைகளுக்கான ஆசிரியையாகப் பணிபுரிகிறார். மூத்த மகன் ஆகாஷ் கங்கா ஏழாம் வகுப்பிலும் இளைய மகன் அகில் நந்தன் ஆறாம் வகுப்பும் பயிலுகிறார்கள்.

படைப்புலகம்

அய்யனார் விஸ்வநாத் 2007 முதல் தனது வலைப்பதிவுகளில் கவிதைகள், நாவல்கள், ரசனை குறிப்புகள் மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். அவரது நூல்கள் வம்சி, கிழக்கு, சீரோ டிகிரி ஆகிய பதிப்பகங்களின் மூலம் வெளியாகி உள்ளன.

கவிதைகள்
  • தனியறை மீன்கள்
  • தனிமையின் இசை
  • நானிலும் நுழையும் வெளிச்சம்
  • எனக்கு மனிதர்களைப் பிடிக்காது
நாவல்கள்
  • பழி
  • இருபது வெள்ளைக்காரர்கள்
  • புதுவையில் ஒரு மழைக்காலம்
  • ஓரிதழ்ப்பூ
  • ஹிப்பி
  • ஆலா
சிறுகதைத் தொகுப்புகள்
  • முள்ளம்பன்றிகளின் விடுதி
  • உரையாடலினி
கட்டுரைத் தொகுப்புகள்
  • நிகழ்திரை
  • தினசரிகளின் துல்லியம்
  • நீட்ஷேவின் குதிரை
குறும்படம்
  • தீராச்சுழல்
திரைக்கதை உதவி
  • The Road Song – Spanish
  • Kottayam - Malayalam

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.