under review

அரங்கசாமி ஐயங்கார்

From Tamil Wiki

அரங்கசாமி ஐயங்கார் (ஜூலை 1877 - பிப்ரவரி 4, 1934) கட்டுரையாளர், இதழாளர், அரசியல்வாதி. மத்திய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

அரங்கசாமி ஐயங்கார் 1877 ஜூலையில் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள எருகத்தூர் கிராமத்தில் நரசிம்ம அய்யங்காருக்கு மகனாகப் பிறந்தார். சென்னையில் சட்டம் பயின்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் மருமகன்.

இதழியல் வாழ்க்கை

1905 ஆம் ஆண்டில் கஸ்தூரி ரங்க ஐயங்கார் தி இந்துவை வாங்கியபோது, அரங்கசாமி ஐயங்கார் உதவி ஆசிரியராக இருந்தார். 1915 வரை பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார். நிறுவனத்தின் மற்றொரு வெளியீடான சுதேசமித்ரனின் விவகாரங்களை நிர்வகிக்க உதவி ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். எஸ். அரங்கசாமி ஐயங்கார் 1926-ல் இறந்தபோது அரங்கசாமி ஐயங்கார் தி இந்துவுக்குத் திரும்பி 1928 முதல் 1934 வரை அதன் முதன்மை ஆசிரியராக பணியாற்றினார். இவர் இறப்பிற்குப் பின் தி இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக கஸ்தூரி ஸ்ரீனிவாசன் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

அரங்கசாமி 1923 - 1926-ல் தொடர்ச்சியாக இரண்டு முறை மத்திய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயாட்சிக் கட்சியில் சேர்ந்து 1925 - 1927 வரை அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். முதன்மை ஆசிரியராக இருந்த காலத்தில், இவர் 1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.

மறைவு

அரங்கசாமி ஐயங்கார் 1934-ல் காலமானார்.

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.