ரமேஷ் ரக்சன்

From Tamil Wiki
Revision as of 12:25, 13 May 2022 by Ramya (talk | contribs) (Created page with "ரமேஷ் ரக்சன் (பெ.ரமேஷ்) (பிறப்பு: ஜூலை 30, 1987) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார். == வாழ்க்கைக் குறிப்பு == பெ.ரமேஷ் என்பது இயற்பெயர். ரமேஷ் ரக்சன் திருநெ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ரமேஷ் ரக்சன் (பெ.ரமேஷ்) (பிறப்பு: ஜூலை 30, 1987) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பெ.ரமேஷ் என்பது இயற்பெயர். ரமேஷ் ரக்சன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரத்தில் பெருமாளுக்கும் பொன்ராணிக்கும் மகனாகப் பிறந்தார். பனகுடியிலுள்ள திரு இருதய ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். திருநெல்வேலி மாவட்டம் கள்ளிகுளத்திலுள்ள டி.டி.எம்.எஸ் கல்லூரியில் பி.காம் பயின்றார். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும், உலக வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஆகிய இரண்டு டிப்ளமோ பட்டமும் பெற்றுள்ளார். ஓசூரில் ஹெச்.டி.பி ஃபினான்ஷியல் சர்வீஸ் நிறுவனத்தில் கிளை கடன் மேலாளராக பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ரமேஷ் ரக்சனின் முதல் சிறுகதை "ப்ச்" ஆகஸ்ட் 2013-ல் வெளிவந்தது. முதல் சிறுகதை தொகுப்பு ”16” தொகுப்பாக 2014 நவம்பரில் வெளியானது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ் என்று குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கலகம் விருது "16" என்கிற சிறுகதை தொகுப்பிற்கு கிடைத்துள்ளது.
  • ஜெயந்தன் விருது "ரகசியம் இருப்பதாய்" தொகுப்பிற்கும் கிடைத்துள்ளது.

நூல்கள்

நாவல்
  • நாக்குட்டி
சிறுகதைகள்
  • 16
  • ரகசியம் இருப்பதாய்
  • பெர்ஃப்யூம்

வெளி இணைப்புகள்

  • ரமேஷ் ரக்சன் தளம்