first review completed

ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 22:33, 29 January 2022 by Ramya (talk | contribs)


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை

ஜே. எம். நல்லுச்சாமிப்பிள்ளை [ஜே.எம்.நல்லசாமி பிள்ளை] (1864-1920) சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர், இதழாளர், சொற்பொழிவாளர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சைவ மீட்பு இயக்கத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். மாவட்ட நீதிபதியாகப் பணிபுரிந்தார்.

பிறப்பு, கல்வி

ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை திருச்சியில் நவம்பர் 24, 1864ஆம் ஆண்டு மாணிக்கம்பிள்ளைக்கும் செல்லத்தம்மைக்கும் மூன்றாம் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மாவட்ட காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். நல்லுசாமிப் பிள்ளையின் முன்னோர்கள் எப்போதும் காஞ்சி குடிவகையினர் (ஜனவி குலத்தினர்) என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள காஞ்சி காமாட்சி கோவிலின் மரபுவழி உரிமை அவர்களுக்கு உரியது.

திருச்சி எஸ்.பி.ஜி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்தார். சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்து 1884இல் பி.ஏ பட்டம் பெற்றார். 1886இல் பி.எல் பட்டமும் பெற்றார். கல்வியில் மிகச்சிறந்த மாணவராக இருந்த நல்லுச்சாமிப்பிள்ளை முதலிடத்திலேயே வெற்றிபெற்று வந்தார்.அவருடைய இரு ஆசிரியர்கள் டாக்டர் டி.டங்கன், திரு பில்டர்பெக் ஆகியோர் அவரைப்பற்றி மிக உயர்ந்த மேதமையை வெளிப்படுத்தும் மாணவன் என பதிவுசெய்திருக்கிறார்கள். கல்லூரியில் தத்துவம், தர்க்கவியல், வரலாறு ஆகியவற்றை முதன்மைப்பாடங்களாகக் கற்றார்.

தனிவாழ்க்கை

1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார். மதுரையில் சர்.எஸ்.சுப்ரமணிய ஐயரின் கீழ் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றினார். பின் திருப்பத்தூர் மாவட்ட முன்சீப் ஆக 1893ல் பதவியேற்றார். இருபதாண்டுகள் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றினார். பொதுவாக பல வழக்குகளில் ஆங்கில அரசுக்கு ஒத்துப்போகும் நிலையை அவர் எடுக்கவில்லை என்பதனால் அவர் விசாரணைசெய்யப்பட்டார். ஆகவே 1912ல் பதவியை உதறிவிட்டு மீண்டும் மதுரையிலேயே வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

ஜே.எம்.நல்லுச்சாமிப் பிள்ளை 1884ல் தன் உறவினர் பரசுராம பிள்ளையின் மகள் லட்சுமியம்மாளை மணந்தார். இவருக்கு ஒருமகன் மூன்று பெண்கள். இவரது மகன் ராமநாதன் சைவ சித்தாந்தத்தில் ஆர்வம் உடையவராக அறியப்பட்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஜே.எம். சோமசுந்தரம் அறநிலையத்துறையில் துணை ஆணையராக இருந்து ஓய்வு பெற்றபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் இருந்தார். கோவில் வரலாறு, சிற்பங்கள் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை (சோழர்காலக் கோவில் பணிகள், Tiruchendoor Temple).

அவருக்குச் சொந்தமான நல்ல நூலகம் இருந்தது. Encyclopaedia Brittanica வின் 25 தொகுதிகள் இவரிடம் இருந்தன. The Person, The Windsor, Temple Bar, The Chamber's Journal போன்ற பத்திரிகைகளைத் தம் சொந்த நூலகத்துக்கு வாங்கியிருக்கிறார். என் நூலகம் படிப்பவருக்கு எப்போதும் திறந்திருக்கும் என்று அடிக்கடிக் கூறுவாராம்.

1887இல் நல்லுசாமி தன் 23வது வயதில் வக்கீல் தொழில் ஆரம்பித்ததில் இருந்து தம் இறுதிக்காலம் வரை 33 ஆண்டுகளாகத் தம் வருமானத்தின் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்கும் பத்திரிகைகளை அச்சிடுவதற்கும் செலவிட்டிருக்கிறார். அவர் சைவசித்தாந்தத புத்தகங்களைத் தம் சொந்தச் செலவில் ஐரோப்பியர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்.

சைவ சித்தாந்தம்

அவர் எழுதிய சைவசமயம் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளை ஜெர்மனியில் மேக்ஸ் முல்லர், பாரிசில் ஜூலியன் வில்சன், லண்டனில் பிரூரசர், ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் ஆகியோர் படித்துவிட்டு எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே சைவத்தையும் தமிழையும் பற்றி அறிய நல்லுசாமி காரணமாய் இருந்திருக்கிறார்.

நல்லுசாமி சைவ சித்தாந்தம் பற்றி நுட்பமாக அறிந்த தமிழறிஞர். அந்தக் காலத்தில் சைவம், சித்தாந்தம், சமய இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதினார். போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பு வந்தபோது அவர் அந்த நூலில் நூறு பிரதிகளை விலைக்கு வாங்கித் தமிழ் அறியாத அறிஞர்களுக்கு இலவசமாய்க் கொடுத்திருக்கிறார்.

வாழ்க்கை வரலாறு

ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளையின் வரலாற்றை கெ.எம்.பாலசுப்ரமணியம் 'The Life and History of J.M.Nalluswami Pillai’  என்றபேரில் நூலாக்கியிருக்கிறார்.

நூல்கள் பட்டியல்

  • Studies in Saiva-Siddhanta. with an Introduction by V.V. Ramana Sastrin
  • Sivagnana Botham of Meykanda Deva
  • Thiruvarutpayan: of Umapathi Sivacharya by Umapathi Shivachariyar and J.M.Nallaswami Pillai
  • Ivaja Siddhiyr of Arunandi Ivchrya. Translated with Introd., Notes, Glossary Etc. by J.M. Nallaswmi Pillai
  • Pura-Porul “The Objectives” (T.A. - Vol. 1 Pt. 6): v. 2, Pt. 6by G.U. ; Nallaswami Pillai J.M. Pope
  • சிவஞான போதம் ( Sivagnana Botham ) (Tamil Edition)
  • சைவ சித்தாந்த ஆராய்ச்சி ( Saiva Siddhanta Aaraaichi ): உயிரின் தன்மை (Tamil Edition)

இறப்புக்காலம்

ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை ஆகஸ்ட் 11, 1920இல் தன் ஐம்பத்தாறாம் வயதில் மதுரையில் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

உசாத்துணைகள்