under review

லக்ஷ்மி சரவணகுமார்

From Tamil Wiki
Revision as of 18:46, 7 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
லக்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமார், தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர். திரைத்துறையில் உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார். விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த, பாலியல் சார்ந்த அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களையும், வன்முறைகளையும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

தனி வாழ்க்கை

திரைப்பட உதவி இயக்குநராக, வசனகர்த்தாவாக பணிபுரிகிறார். ‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர். 2015-ல் கென்யாவில் நடைபெரும் 'ஸ்லம் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' (Slum film festival)-ல் இந்த குறும்படம் திரையிடப்பட்டுள்ளது.

பங்களிப்பு

இலக்கியம்
ரூஹ் நாவல்

எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பல தளங்களில் எழுதி வருபவர்.

தன் 17-வது வயதிலேயே தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

2007 நவம்பர் மாதத்தில் `புதிய காற்று' இதழில் `எஸ்.திருநாவுக்கரசுக்கு 25 வயதான பொழுது' என்ற முதல் சிறுகதை வெளியானது.

இவர் கதைகளில் வெளிப்படுவது வெறுமனே பாலியல் சார்ந்த சூழல்களல்ல, அதன் பின்னணியிலிருக்கும் குரூரங்களும் வன்முறைகளும். கொமோரா, நீலப்படம் இரண்டு நாவல்களுமே சிறுவயதில் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறவர்களின் அகச்சிக்கலை பிரதானமாய்ப் பேசுகிறது.

இவர் நாவல்கள் திரைக்கதை வடிவில், காட்சி ஊடகத்துக்கான மொழியில் அமைந்திருக்கின்றன.

'ரூஹ்' நாவல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களுக்குள் இருக்கும் நேசத்தைப் பேச விழையும் கதைக்களம். இந்த நாவலை ஸீரோ டிகிரி பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

விருது

உப்பு நாய்கள் நாவல்

'கானகன்' என்னும் நாவலை ப.சிங்காரத்தின் நாவல் போட்டிக்கு முதலில் அனுப்பியுள்ளார். பின்னர் புத்தகமாக வெளிவந்து, 2016-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை பெற்றது. 'உப்பு நாய்கள்' என்ற புதினத்துக்காக 2012-ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்.

இலக்கிய இடம்

பாலியல் சார்ந்த, அதன் பின்னணியிலிருக்கும் குரூரரங்களையும், வன்முறைகளையும் எழுதி வருபவர். இதுவரை தன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான பதிவுகளையே தன் நாவலில் எழுதியிருக்கும் இவர், சமூகத்தில் விளிம்புநிலை வாழ்க்கை வாழ்வோரின் கசப்பான பக்கங்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்.

நூல் பட்டியல்

நாவல்கள்
  • கானகன்
  • நீலப்படம்
  • கொமோரா
  • உப்பு நாய்கள்
  • ரூஹ்
  • வாக்குமூலம்
  • ஐரிஸ்
  • ரெண்டாம் ஆட்டம்
சிறுகதை தொகுப்புகள்
  • நீல நதி
  • யாக்கை
  • முதல் கதை
  • போர்க்குதிரை
  • வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை
  • மச்சம்
கவிதைத் தொகுப்பு
  • மோக்லியை தொலைத்த சிறுத்தை (2014)
கட்டுரை
  • தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு
  • Huntsman (by Aswini Kumar - Zero Degree Publishing)

உசாத்துணை


✅Finalised Page