under review

அருணாச்சலம் (பாவலியார்)

From Tamil Wiki
Revision as of 01:04, 8 October 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அருணாச்சலம் (பாவலியார்)

அருணாச்சலம் (பாவலியார்) (பிறப்பு: 1932) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர். இரணியனாக பலமுறை கூத்து ஆடியவர். வில் வளைப்பில் அர்ச்சுனன், சுபத்திரை கல்யாணத்தில் பலராமன் ஆகியவை இவரின் முக்கியமான இரண்டு தெருக்கூத்து வேடங்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணாச்சலம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் பாவாலியில் 1932-ல் பிறந்தார். களத்தூரில் உள்ள கரிவேடு மதுராவில் வசித்தார். கூத்து இல்லாத நேரங்களில் மாடு மேய்த்தார். பாவலியில் பிறந்ததால் பாவலியார் என்று அழைக்கப்பட்டார்.

கலை வாழ்க்கை

அருணாச்சலம் 'வெண்பாக்கம் வெங்கடேஸ்வரா நாடக மன்றத்தில் கூத்து ஆடினார். இவரது வாத்தியார்(ஆசான்) பெரியமேடு அய்யலு நாயுடு. அருணாச்சலம் தன் இருபத்தி மூன்றாம் வயதில் இரணியவிலாசம் என்ற தெருக்கூத்தை ஆடினார். அதன்பிறகு காவேரிப்பாக்கம் மண்ணு வாத்தியாராக இருந்தார். இரணியனாக பலமுறை கூத்து கட்டினார். ஒவ்வொரு கூத்திலும் வில் வளைப்பில் அர்ச்சுனன், சுபத்திரை கல்யாணத்தில் பலராமன் ஆகிய இரண்டு வேடங்களில் மட்டுமே நடித்தார். அய்யலு நாயுடு இறக்கும் வரை பதினைந்து ஆண்டுகள் அவரின் குழுவில் கூத்து கட்டினார். பின்னர் பிற குழுக்களில் ஆடினார்.

ரேணுகாசரித்திரம், சயிந்தவபங்கம், மணிமாலன் சண்டை, கர்ணமோட்சம், தக்கயாகம், குறவஞ்சி, சிறுதொண்டன், இரணியவிலாசம், சுபத்திரை கல்யாணம், வில் வளைப்பு, சுந்தரி கல்யாணம், அபிமன்யு சண்டை, பதினெட்டாம் போர் ஆகிய கூத்துகளை தன் வாழ்நாளில் கற்றார்.

பங்கேற்ற கூத்துகள்

  • ரேணுகாசரித்திரம்
  • சயிந்தவபங்கம்
  • மணிமாலன் சண்டை
  • கர்ணமோட்சம்
  • தக்கயாகம்
  • குறவஞ்சி
  • சிறுதொண்டன்
  • இரணியவிலாசம்
  • சுபத்திரை கல்யாணம்
  • வில் வளைப்பு
  • சுந்தரி கல்யாணம்
  • அபிமன்யு சண்டை
  • பதினெட்டாம் போர்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 17:53:45 IST