ஆ.ரா.சிவகுமாரன்

From Tamil Wiki
Revision as of 09:07, 30 April 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஆ.ரா.சிவக்குமாரன் (15 நவம்பர்1954 ) தமிழாய்வாளர், கல்வியாளர். சிங்கப்பூர் கல்விநிலையங்களில் பணியாற்றியவர். சிங்கப்பூர் இலக்கியவரலாற்றாசிரியர். சிங்கப்பூர் இலக்கிய ஆய்வாளர். == பிற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆ.ரா.சிவக்குமாரன் (15 நவம்பர்1954 ) தமிழாய்வாளர், கல்வியாளர். சிங்கப்பூர் கல்விநிலையங்களில் பணியாற்றியவர். சிங்கப்பூர் இலக்கியவரலாற்றாசிரியர். சிங்கப்பூர் இலக்கிய ஆய்வாளர்.

பிறப்பு, கல்வி

ஆ.ரா.சிவக்குமாரன் தமிழகத்தில் காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரில் ஆறுமுகம் ராமசாமி -அபிராமி இணையருக்கு 15 நவம்பர் 1954 ல் பிறந்தார். தொடக்கக் கல்வியை திருமலைராயன் பட்டினம் சுவாமிநாத முதலியார் ஆரம்பப் பாடசாலையில் முடித்து நடுநிலைப் பள்ளியையும் உயர்நிலைப் பள்ளியையும் திருமலைராயன் பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து பாண்டிச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில், ( அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது) இளங்கலை தமிழ் பயின்றார். கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் முதுகலைப் படிப்பு முடித்தபின் சிங்கப்பூருக்குச் சென்றார்.

சிங்கப்பூர் தேசியகல்விக் கழகத்தில் 19811981 முதல் 1983 வரை ஆசிரியப் பயிற்சியை முடித்தார். சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் ‘சிங்கப்பூர் தமிழிலக்கியம் ஒரு திறனாய்வு- 1965 முதல் 1990 வரை ‘ என்னும் தலைப்பில் முனைவர் சுப.திண்ணப்பனின் கீழ் முனைவர் பட்ட ஆய்வை நிறைவுசெய்தார்.

தனிவாழ்க்கை

கல்விப்பணி

சிவக்குமாரன் சிங்கப்பூர் கத்தோலிக்க தொடக்கக் கல்லூரியில் 1980ல் தற்காலிய ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். பின்னர் சிங்கப்பூர் தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்று மீண்டும் அதே கத்தோலிக்க தொடக்கக் கல்லூரியில் முழுநேர ஆசிரியரானார். உமறுபுலவர் தமிழ்மொழி நிலையம், தெமாசிக் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழ் கற்பித்தார். நான்யாங் தொடக்கக் கல்லூரியில் தமிழாசிரியராகி பின்னர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தேசிய கல்விக்கழகத்தில் பேராசிரியராகி 31 டிசம்பர் 2019 ல் ஓய்வுபெற்றார்.