under review

கல்லாடம் (ஊர்)

From Tamil Wiki
Revision as of 18:35, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கல்லாடம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்லாடம் (பெயர் பட்டியல்)

கல்லாடம் என்ற திருத்தலம் திருவாசகத்தில் போற்றப் பெறுகிறது. இதைப் பாண்டிய நாட்டுப் பழம்பதிகளுள் ஒன்று எனவும், மேற்குக் கடற்கரையில் கொல்லத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர் எனவும் கூறுகிறார்கள்.

வீரசைவ ஞானாசிரியர்களுடைய மரபு ஒன்று 'ஹல்லட' என வழங்கப் பெறுவதாகவும், ஒருகால் 'கல்லாடர்' என்ற பெயரோடு ஒற்றுமையுடையதாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. முதல் கல்லாடர் தன் பாட்டில் அவர் வேங்கடமலைக்கு அப்பாலிருந்து வந்தார் என்று கூறுவதனால் இந்த ஊர் ஆந்திரநிலத்தில் உள்ளது என்றும் கருதப்படுகிறது.

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Sep-2024, 19:42:16 IST