under review

முத்துவீரியம்

From Tamil Wiki
Revision as of 18:30, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முத்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்து (பெயர் பட்டியல்)

முத்துவீரியம் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஓர் தமிழ் இலக்கண நூல். தமிழ் மரபைத் தழுவி எழுந்த இந்நூல் ஐந்திலக்கணங்களையும் விரிவாகக் கூறுகிறது.

ஆசிரியர்

முத்துவீரியம் திருச்சிக்கு அருகில் உள்ள உறையூரைச் சேர்ந்த முத்துவீரர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரை முத்துவீர உபாத்தியாயர் எனவும் அழைப்பர். இறுதிக் காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சார்ந்த சமயம் பற்றி நூலில் வெளிப்படையாக எதுவும் கூறப்படாவிட்டாலும், அதில் காணப்படும் சில குறிப்புகளை வைத்து இவர் சைவ சமயத்தினரென்று கருதப்படுகிறது.

நூல் அமைப்பு

முத்துவீரியம் 1289 ஆசிரியப்பாக்களால் ஆனது. ஐந்திலக்கண நூல்களுள் மிகவும் விரிவானது. முத்துவீரியம் 96 வகைச் சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணம் கூறுகின்றது.

முத்துவீரியம் பின்வரும் அதிகாரங்களையும், இயல்களையும் கொண்டது.

  • எழுத்ததிகாரம்: எழுத்தியல், மொழியியல், புணரியல்
  • சொல்லதிகாரம்: பெயரியல், வினையியல், ஒழிபியல்
  • பொருளதிகாரம்: அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல்
  • யாப்பதிகாரம்: உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல்
  • அணியதிகாரம்: சொல்லணியியல், பொருளணியியல், செய்யுளணியியல்

உசாத்துணை

முத்துவீரியம், தமிழ் இணைய கல்விக் கழகம்


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:45:17 IST