standardised

பத்மபிரபா

From Tamil Wiki
Revision as of 23:59, 21 April 2022 by Tamaraikannan (talk | contribs)
பத்மபிரபா

பத்மபிரபா சமணத்தின் ஆறாவது தீர்த்தங்கரர்.

புராணம்

பத்மபிரபா கௌசாம்பியில் மன்னர் தரன்ராஜ், ராணி சுசிமா ஆகியோருக்கு மகனாக இக்சவாகு வம்சத்தில், பிறந்தார். மாசி தேய்பிறை புனித நாளில் சுசீமாவின் வயிற்றில் தோன்றினார். கார்த்திகை தேய்பிறை 13-ஆம் நாளில் மகனைப் பெற்றெடுத்தார். சௌதர்ம இந்திரன் 'பாண்டுக் ஷிலா'வில் அபிஷேகம் செய்த பிறகு அவருக்கு பத்மபிரப் என்று பெயரிட்டார். ஒரு நாள் வாசலில் கட்டப்பட்ட யானையின் கதையைக் கேட்ட பத்மபிரபா, தனது கடந்தகால வாழ்க்கையை நினைவுகூர்ந்து, தனிமையை உணர்ந்தார். அவர் மனோகர் வனத்திற்குச் சென்று கார்த்திகை தேய்பிறை 13ஆம் நாளில் பிரியங்கு மரத்தடியில் ஜைனேஷ்வரி தீட்சையை மேற்கொண்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு சித்திரை வளர்பிறை முழுநிலவு நாளில் சர்வ ஞானம் அடைந்தார். பல வருடங்கள் பிரசங்கித்த பிறகு, பத்மபிரபு இறுதியாக பங்குனி தேய்பிறை 4ஆம் நாள் சம்மேட் ஷிகர்ஜி மலையிலிருந்து நிர்வாணம் அடைந்தார்.

முந்தைய ஜென்மம்

பத்மபிரப் தனது முந்தைய வாழ்க்கையில் அபராஜித் மன்னராக இருந்தார். அவர் 'வட்சதேசத்தில்' சுசிமாநகரை ஆண்டார். தனது ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்த அவர் தீட்சை பெறுவதற்காக பிஹிதாஸ்த்ரவ் ஜினேந்திரனிடம் சென்றார். அங்கு கடுமையான தியானம் மற்றும் பதினொரு அலகு பயிற்சி பெற்று அவர் தீர்த்தங்கரர் இயல்பு பெற்றார்.

அடையாளங்கள்

  • பத்மபிரபா சிலை
    உடல் நிறம்: ரூபி
  • லாஞ்சனம்: செந்தாமரை
  • மரம்: பிரியங்கு மரம்
  • உயரம்: 250 வில் (750 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 30 லட்சம் பூர்வ ஆண்டுகள்
  • முதல் உணவு: வர்தமு நகரின் சோமதத்தா அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 110 (வஜ்ரசாமர்)
  • யட்சன்: சியாமா அச்சுதன்
  • யட்சினி: மனோவேக தேவி

கோயில்கள்

  • பத்மபுரா சமனக் கோயில், ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
  • மகுடி சமணர் கோயில், காந்திநகர், குஜராத்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.