தமிழன் இதழ்கள்
From Tamil Wiki
தமிழன் இதழ்கள்: தமிழன் என்ற பெயரில் வெவ்வேறு தமிழ் இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இதழ்கள்
- 1907-ஆம் ஆண்டில் பண்டித அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்னும் இதழை தொடங்கி பின்னர் அதை தமிழன் என்னும் இதழாக ஆக்கினார் (பார்க்க தமிழன்)
- 1912-ல் தமிழன் என்னும் இதழ் எஸ்.முத்துசாமி என்பவரால் திருவனந்தபுரத்தில் இருந்து நடத்தப்பட்டது
- 1934-ல் நாகர்கோயிலில் இருந்து தமிழன் என்று ஓர் இதழ் வெளிவந்தது. இதை ப.சிதம்பரம், ப.சுப்ரமணியம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து நடத்தினர்.
- 1942-ல் சி.பா.ஆதித்தனார் மதுரையில் இருந்து தமிழன் என்னும் இதழை வெளியிட்டார். (பார்க்க சி.பா.ஆதித்தனார்)
.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.