சௌரிப்பெருமாள் அரங்கன்
சௌரிப்பெருமாள் அரங்கன்(திருக்கண்ணபுரம் திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன்) தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழாசிரியர், குறுந்தொகையை முதன்முதலில் உரையுடன் பதிப்பித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
சௌரிப்பெருமாள் அரங்கன் வேலூர் இந்து தேவஸ்தான உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பொறுப்பேற்றார். பின்னர் வாணியம்பாடி மதரஸே இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சௌரிப்பெருமாள் அரங்கன் முத்துரத்ன முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி குறுந்தொகையைப் படியெடுக்கச் சென்னை அரசு நூல்நிலையம் சென்றார். அந்நூலகச்சுவடியில் காணப்பெற்ற பிழைகளும் குறுந்தொகையின் 316-ஆம் பாடல் விடுபட்டுப்போயிருந்ததும் அவர் குறுந்தொகைக்கு உரையெழுதக் காரணங்கள் ஆயின. ஓப்பீட்டிற்கு உதவியாக முத்துரத்ன முதலியார் குறுந்தொகையின் மற்றொரு சுவடியை வரவழைத்துக்கொடுத்தார். அவ்விரு சுவடிகளோடு மதுரைத் தமிழ்ச்சங்க சுவடி ஆகிய மூன்றையும் ஒப்புநோக்கிக் குறுந்தொகைக்கு உரையெழுதினார். அந்நூலும் உரையும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அன்புரிமையாக்கப்பட்டன.
குறுந்தொகை உரை
- தலைப்புப்பக்கம்
- பாடினோர் பெயர்
- குறுந்தொகை மூலமும் உரையும்
- அரும்பத அகராதி
என 368 பக்கங்களைக் கொண்டது.
பதிப்பியல்
சிலப்பதிகாரத்தை முதன்முதலில் பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கன்.
நூல் பட்டியல்
உசாத்துணை
இலக்கிய தீபம், எஸ். வையாபுரிப் பிள்ளை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.