திருவெங்கைக்கோவை
திருவெங்கைக்கோவை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய கோவை என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்த நூல். மந்திரிக்கோவை எனவும் சிறப்பிக்கப்படுகிறது.
ஆசிரியர்
திருவெங்கைக்கோவையை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.
நூல் அமைப்பு
திருவெங்கைக்கோவை திருவெங்கை என்னும் தலத்தில் கோவில் கொண்ட சிவபெருமானைப் பாட்டுடத் தலைவனாகக் கொண்ட கோவை என்னும் சிற்றிலக்கியம். இந்நூல் களவியல்,வரைவியல்,கற்பியல் என மூன்று இயல்களில் 425 செய்யுள்களைக் கொண்டது. களவியல் பதினேழு தலைப்புகளில் 283 பாடல்களையும் வரைவியல் 8 தலைப்புகளில் 185 பாடல்களையும் கற்பியல் 7 தலைப்புகளில் 57 பாடல்களையும் பெற்று வருகிறது. இக்கோவை களவு கற்பு, என்னும் இரண்டு இயல்களில் இருபத்தாறு கிளவிக் கொத்துகளால் நானூறு துறைகளைக் கொண்டு முடிகிறது.
கோவை நூல்களில் மாணிக்கவாசகரின் திருக்கோவையாருக்கு அடுத்ததாக திருவெங்கைக்கோவை குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. திருக்கோவையார் 'ராஜ கோவை' என்றும் திருவெங்கைக்கோவை 'மந்திரிக்கோவை' எனவும் சிறப்பிக்கப்படுகின்றன.
பாடல் நடை
கைக்கிளை
காட்சி
கைக்கிளைகாட்சி பூவும் பழுத்த செழுந்தீங் கனியும் பொழியமுதம்
மேவுங் குடங்க ளிரண்டுட னேயிரு மீனுங்கொண்டு
சேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர்
தூவும் பொழிலி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே.
குறிப்பறிதல்
பாயு மலர்த்தண் பொழில்சூழும் வெங்கைப் பழமலைசீர்
ஆயு முனிவரர் தாமே முனிவரு ளாக்குதல்போல்
நோயுமந் நோய்க்கு மருந்துந் தராநிற்கு நூற்பகவிற்
றேயு மருங்குற் பெருமுலை மாதர் திருக்கண்களே.
உசாத்துணை
திருவெங்கைக்கோவை மூலமும் உரையும், சைவம்.ஆர்க்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:07:27 IST