under review

சி. ஆறுமுகப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:53, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom)

சி. ஆறுமுகப்பிள்ளை தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் வாழ்ந்தவர். அப்புக்குட்டி உபாத்தியாயர் என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

ஊரிக்காடு நெற்கொழு வைரவர்

வல்வை ச. வயித்தியலிங்க பிள்ளையிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். வைமன் கதிரவெற்பிள்ளையின் அகராதி வேலையில் உதவியாக பணி செய்தார். அவர் தந்தையாரின் பாடல்களை "குமாரசாமி முதலியார் கவித்திரட்டு" என 1887-ல் தொகுத்து வெளியிட்டவர். கிறித்துப்பலப்பிரிவினை, கிறிஸ்துசமய பேதம், விவிலியநூல் வரலாறு எனும் கண்டன நூல்களை கிறிஸ்தவருக்கு எதிராக எழுதியவர். சைவ சமய நூல்களை எழுதினார். ஊரிக்காடு நெற்கொழு வைரவரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பதிகம் பாடினார்.

நூல்கள் பட்டியல்

பதிகம்
  • நெற்கொழு வைரவர் பதிகம்
பிற
  • கிறித்துப்பலப்பிரிவினை
  • கிறிஸ்துசமய பேதம் (1889)
  • விவிலியநூல் வரலாறு (1889)

உசாத்துணை


✅Finalised Page