under review

அ. நாகப்ப முதலியார்

From Tamil Wiki
Revision as of 16:49, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom)

அ. நாகப்ப முதலியார் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். அவரது படைப்புகளில் அத்வைத சிந்தாமணி முக்கியமானது.

வாழ்க்கைக் குறிப்பு

சோழநாட்டின் திருத்தில்லைபதிக்கு அருகிலுள்ள பெருமாத்தூரில் அருணாச்சல முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வி பயின்றார். அந்தாதிகள், கலம்பகங்கள், நிகண்டுகளைக் கற்றார். திருத்தில்லை சுத்த அத்வைதானுபவாநந்தாதீதராய் வீரசைவ மரபில் வந்த சுப்பராய அடிகளிடம் அறிவு நூல்களைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

செய்யுள்கள் பல பாடினார். வேதாந்தக் கருத்துகளை உள்ளடக்கிய அத்வைத சிந்தாமணி எனும் ஞான சார நூலை இயற்றினார். இந்நூல் 103 விருத்தப்பாக்களால் ஆனது.

பாடல் நடை

அத்வைத சிந்தாமணி

அளவிறந்த நெடுங்காலம் தன்னைத் தானே
அறியாத மயலதனால் பவத்துன் பத்தில்
தளர்வுறுமோர் சிவன்முன் சனனத் தாற்றும்
சற்கரும நிட்காய தவத்தின் பேறால்

சிறப்புப் பாயிரம் பாடியவர்கள்

  • பதூர் சண்முகம் பிள்ளை
  • புவனகிரிப் பட்டணம் சிவசிதம்பர பாகவதர்
  • மதுரை மாவட்டம் வீரை நல்லழகப்பிள்ளி
  • காத்தமுத்து உபாத்தியாயர்
  • முத்துப்பேட்டை பொன்னுச்சாமிபிள்ளை
  • பெருமாத்தூர் அருணாச்சலஞ்செட்டியார்
  • சத்துக்குழி குப்புசாமிப்பிள்ளை

நூல் பட்டியல்

  • அத்வைத சிந்தாமணி

உசாத்துணை


✅Finalised Page