under review

கோபால நேசரத்தினம்

From Tamil Wiki
Revision as of 15:49, 15 April 2022 by Manobharathi (talk | contribs) (amending the date to the standard)

கோபால நேசரத்தினம் (1927) இலங்கை எழுத்தாளர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய சமூகசீர்திருத்த நாவல். சைவப்பிரச்சார நோக்கம் கொண்டது.

எழுத்து, பிரசுரம்

இந்துசாதனம் என்னும் இதழில் 1921-ல் முதல் தொடராக வெளிவந்த நாவல் இது. 1927-ல் நாவலாக வெளிவந்தது. யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை வெளியீடு.

கதைச்சுருக்கம்

கணவனை இழந்த வள்ளியம்மை தன் மகன் கோபாலனை ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆங்கிலக்கல்விக்காகச் சேர்க்கிறாள். அங்கே குட்டித்தம்பி போதகர் என்பவர் அவனை மதம் மாற்றும் நோக்குடன் தன் மகள் நேசரத்தினத்தை அவனுடன் பழக விடுகிறார். ஆனால் கோபாலன் மதம் மாறாமல் நேசரத்தினத்தை மதம் மாற்றி சைவசமயத்துக்கு கொண்டுவந்து மணந்துகொள்கிறார். குட்டித்தம்பி போதகர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவரும் சைவராக மாறுகிறார்

இலக்கிய இடம்

தமிழில் கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் மீண்டும் இந்துமதம் திரும்புதல் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல். அக்கால யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக்கல்வி, கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் ஆகியவற்றின் நிலையை காட்டுகிறது. ‘பொதுஜனங்கள் இரசிக்கக்கூடியதாய், யாழ்ப்பாண பொதுவழக்கில் பழமொழிகள் மிகுதியாகக் கொண்டதாய் உலகம் பலவிதம் என்ற தலைப்பில் துரைரத்தினம் நேசமணி, கோபால நேசரத்தினம் முதலிய கதைநூல்களை நமக்குத் தந்துள்ள ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளைதான் எழுத்தாளர் என்னும் சொல் தற்காலத்தில் யார் யாரையெல்லாம் குறிக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகக் காட்சியளிக்கிறார்’ என்று கனக செந்திநாதன் ஈழத்து இலக்கியவளர்ச்சி (1964) நூலில் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.