under review

அவதானம் (நினைவுக்கலை)

From Tamil Wiki
Revision as of 17:37, 25 January 2022 by Santhosh (talk | contribs)

அவதானம் (கவனம்) நினைவுக்கலை என பரவலாக குறிப்பிடப்படுகிறது . ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்துகாட்டும் சாதனை அவதானம் எனப்படும்.

முறை

அவதானம் செய்பவர் கைவிரல்களால் வாடச் சங்கிலியைக் கழற்றிக்கொண்டிருப்பார், அவர் முதுகில் ஒருவர் கல்லை எறிவார்; இன்னொருவர் ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச்சொல்வார். இப்படியாகப் பல செயல்களை ஒரே சமயத்தில் செய்து இறுதியில் எல்லாவற்றிற்கும் விடையும் கூறுவது இதன் செயல்முறை. இதற்கு நினைவாற்றல் (கவனம்), விரைவாகச் செயல்படல், வெவ்வேறு பொறிகள் வழி அறிவைப் பெறும் ஆற்றல், பாடல் புனையும் திறமை போன்றன நுட்பமாக இருக்க வேண்டும்.

வகைகள்

  • ஒரே சமயத்தில் ஆறு செயல்கள் செய்வது சட்டவதானம், எட்டு செய்வது செயல்கள் அட்டவதானம்,
  • பத்து செயல்கள் செய்வது தசாவதானம்,
  • 16 செயல்கள் செய்வது சோடவதானம்,
  • நூறு செயல்கள் செய்வது சதாவதானம்.

வரலாறு

இந்த அவதானக்கலை 17ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் உருவானது. இந்த அவதானங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தமிழ்ப்புலவர்கள்.

அவதானிகள்

  • சரவணப்பெருமாள் கவிராயர், செய்குத்தம்பிப் பாவலர் போன்றோர் சதாவதானம் செய்தவர்கள்.
  • சீறாப்புராண ஆசிரியர் உமறுப்புலவரின் பேரர் அப்துல்காதர் அட்டாவதானி.
  • வினோதரசமஞ்சரி நூலாசிரியர் வீராசாமிச் செட்டியார் கூட ஓர் அவதானிதான்.

தமிழகத்தில் அவதானம் செய்தவர்களாக 160க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

உசாத்துணைகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.