under review

ஞானாம்பிகைதேவி

From Tamil Wiki
Revision as of 01:04, 27 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஞானாம்பிகைதேவி

ஞானாம்பிகைதேவி (ஞானாம்பிகை தேவி குலேந்திரன்) (பிறப்பு: நவம்பர் 23, 1936) ஈழத்துப் பெண் எழுத்தாளர், பேராசிரியர், இசை ஆய்வாளர். தமிழர் பண்பாட்டுத் தூதுவராக அறியப்பட்டார். தமிழிசை, இசைமரபு சார்ந்த நூல்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஞானாம்பிகைதேவி இலங்கை நாட்டின் வடமாகாணம் யாழ்ப்பாணத்தில் சிவசுப்பிரமணியம், வீரலட்சுமி இணையருக்கு நவம்பர் 23, 1936 அன்று பிறந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப்பட்டத்தையும் கல்விப்பின் டிப்ளோமாவையும் கோயிற்கலை தொடர்பாக முதுமாணிப்பட்டத்தையும் பெற்றார்.

ஆசிரியப்பணி

ஞானாம்பிகைதேவி வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியராகவும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் தஞ்சாவூர் பல்கலைக்கழக நுண்கலை ஆராய்ச்சித்துறை பேராசிரியராகவும் புதுடில்லி பல்கலைக்கழக மானியக்குழு பெருந்திட்ட முதன்மை ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார்.

பொறுப்புகள்

யாழ்ப்பாணம், சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, காமராசார், மைசூர், கேரளா, ஆந்திரா, காலடி சங்கராசாரியர், தஞ்சாவூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆலோசகராகவும் முனைவர் பட்டப்படிப்பு நெறியாளராகவும், பாடத்திட்டக்குழுத் தலைவராகவும், பரீட்சைக்குழுத் தலைவராகவும், தேர்வாளராகவும் பொறுப்பாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஞானாம்பிகைதேவி 'தெய்வத் தமிழிசை' , 'பரத இசை மரபு' ஆகிய நூல்களை எழுதினார். 'காரைக்காலம்மையார் தென்னிந்திய இசையின் தாய்' என்ற இவரது ஆய்வு நூல் எட்டாம் உலக தமிழராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. 'தஞ்சை நால்வர் வழி நாட்டிய இசை மரபு' என்ற நூல் தஞ்சை நாட்டிய நால்வரான சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரின் அரும்பணிகளை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிய இசை வடிவங்களை சுரஜதி, ஜதிசுரம், தான வர்ணம், பத வர்ணம் ஆகிய உருப்படிகளைத் தஞ்சை நால்வர் இயற்றிக் கையாண்டுள்ள திறம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

  • தெய்வத் தமிழிசை எனும் இவரின் நூல் தமிழக அரசின் சிறப்பு நூற்பரிசு பெற்றது.

நூல் பட்டியல்

  • தெய்வத் தமிழிசை
  • பரத இசை மரபு
  • தென்னிந்திய இசையின் தாய்
  • இசைத் தமிழ் மேதைகள்
  • தமிழகக் கோயில்களில் இசை
  • தஞ்சை நால்வர்வழி நாட்டிய இசை மரபு
  • ஞானா கானம்
  • ஞானா கானம்: இசை நடன ஆய்வுகள்
  • சங்க இலக்கியத்தில் இசை

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jun-2024, 05:04:36 IST