under review

சுபிதா வேலாயுதபிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:45, 24 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுபிதா வேலாயுதபிள்ளை (வேல்மகள்) (பிறப்பு: ஜூன் 28, 1989) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர். சிறுகதை, சிறுவர் கவிதை, கட்டுரை எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுபிதா வேலாயுதபிள்ளை இலங்கை கிளிநொச்சி, புளியம்பொக்கனையில் வேலாயுதப்பிள்ளை, கமலமணி இணையருக்கு ஜூன் 28, 1989-ல் பிறந்தார். தந்தை எழுத்தாளர். ஆரம்ப, இடைநிலைக்கல்வியை கிளிநொச்சி கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியிலும் கற்றார். ஊடகவியல்துறை சார்ந்த டிப்ளோமா பட்டம் பெற்றார்.

பொறுப்புகள்

  • சுபிதா கண்ணகி கலாமன்றத்தின் பொருளாளர்
  • கண்டாவளை பிரதேச கலாச்சார அதிகார சபையின் பொருளாளர்
  • மாவட்ட காலாசார அதிகார சபையின் உறுப்பினர்

இலக்கிய வாழ்க்கை

சுபிதா வேலாயுதபிள்ளை வேல்மகள் என்னும் புனைப்பெயரில் எழுதி வருகிறார். கவிதை, சிறுவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாடகப் பிரதி ஆகியவை எழுதினார். இவரின் சிறுகதைகள், கவிதைகள் மித்திரன், சுடர்ஒளி, தினப்புயல், தினமுரசு ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. கண்டாவளை கலாசாரப் பேரவை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் வளை ஓசை மலரிலும் இவரின் ஆக்கம் வெளிவந்தது. 'நினைவுகளின் நினைவோடு' கவிதைத்தொகுப்பை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • நினைவுகளின் நினைவோடு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2024, 15:10:15 IST