under review

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

From Tamil Wiki
Revision as of 16:51, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

’தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அரசு அமைப்பு. 'சங்கீத நாடக சங்கம்’ என்ற பெயரில் 1955-ல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, 1973-ல், 'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கம்

மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதும், தொன்மையும், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க தமிழகக் கலைகளை போற்றிப் பாதுகாப்பதும் இதன் நோக்கங்கள்.

செயல்பாடுகள்

இவ்வமைப்பின் மூலம் நாட்டுப்புற கலைகள், நாடகம், தெருக்கூத்து , பரத நாட்டியம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இம்மன்றத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கின்றனர். இவர்கள் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள்.

கீழ்க்காணும் திட்டப்பணிகளை இவ்வமைப்பு முன்னெடுக்கிறது.

  • தகுந்த கலைஞர்களை அடையாளம் கண்டு 'கலைமாமணி' விருது வழங்குதல்.
  • நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்குதல்.
  • புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்பப் பராமரிப்பு நிதியுதவி வழங்குதல்.
  • மாநிலங்களிடையே கலைக் குழுக்களைப் பரிமாற்றம் செய்தல்.
  • இளம் கலைஞர்கள் ஊக்குவிப்புத் திட்டம்.
  • கிராமியகலைஞர்கள்/கலைக்குழுக்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்கிட நிதியுதவி வழங்குதல்.
  • சிறந்த நாடகங்கள் உருவாக்கிட நாடகக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குதல்.
  • சிறந்த நாட்டிய நாடகம் உருவாக்கிட நிதியுதவி வழங்குதல்.
  • அரும்பெரும் கலை நூல்களை வெளியிட நிதியுதவி வழங்குதல்.
  • தொன்மையான கலை வடிவங்களை ஆவணமாக்குதல்.
  • கலை விழாக்கள் நடத்துதல்.
  • புகழ்மிக்க கலைஞர்களுக்கு 'பாரதி', 'எம்.எஸ்.சுப்புலட்சுமி' மற்றும் 'பாலசரஸ்வதி' ஆகியோர் பெயரில் அகில இந்திய அளவிலான விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்.

இதுவரை இம்மன்றத்தின் மூலம் சுமார் இரண்டாயிரம் பேர் 'கலைமாமணி’ விருது பெற்றுள்ளனர்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Apr-2023, 19:14:54 IST