under review

திருப்புகழ்ப் புராணம்

From Tamil Wiki
Revision as of 16:51, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருப்புகழ்ப் புராணம் என்னும் நூல் 16-ம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இந்த நூலை இயற்றினார். இது சமண சமய நூல். இங்குள்ள திருப்புகழ் என்னும் சொல் அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழைக் குறிக்காது. அருகனுடைய வழியில் வந்த தீர்த்தங்கரர் ஒருவரின் புகழ் என்பதனைக் குறிக்கும் தொடரே இந் நூலிலுள்ள 'திருப்புகழ்'.

'திரு' என்னும் சொல் சமண நெறியில் சமண மதத்தைக் குறிக்கும். இந்த நூலுக்கு முன்னர் தோன்றிய திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் என்னும் நூலின் பெயர்களால் இதனை அறியலாம்.

ஆசிரியர்

மண்டல புருடர் என்பவர் சூடாமணி நிகண்டு என்னும் நூலை இயற்றியவர். இவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பெருமாண்டூர் (வீரபுரம்)என்னும் ஊரைச் சேர்ந்தவர். தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொள்கிறார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. திருமழபாடி நாட்டில் திருநறுங்கொண்டையில் அமைந்த சைன ஆசார்ய பீடத்தில் குணபத்ராச்சாரியார் என்பவரிடம் தமிழையும்,சமயநூல்களையும் கற்றார்.

நூல் அமைப்பு

தீர்த்தங்கரர்களின் வரலாற்றையும், பெருமையையும் கூறும் நூல் திருப்புகழ் புராணம்.

திருவறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் தாமம்.
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வுமாம் புராணம் செய்தோன்.

என்பன இந்நூலில் வரும் தொடர்ச்செய்திகள்.

உசாத்துணை

தமிழ்ப் புலவர் வரிசை-11 கருப்பங்கிளர் ராமசாமிப் புலவர் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 10:12:55 IST