under review

வீரகத்தியார் காசிநாதர்

From Tamil Wiki
Revision as of 16:37, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வீரகத்தியார்
வீரகத்தியார் காசிநாதர் (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

வீரகத்தியார் காசிநாதர் (செப்டம்பர் 4, 1949) ஈழத்து இசை நாடகக் கலைஞர். தொடர்ந்து இசை நாடகங்கள் நடித்தும், கூத்து பழக்கி அண்ணாவியாராகவும் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை தென்மராட்சியில் வரணி கிராமத்தில் செப்டம்பர் 4, 1949-ல் வீரகத்தியார் காசிநாதர் பிறந்தார். வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்றார். சகோதரன் வீ. வேதாரணியத்துடன் கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

கலை வாழ்க்கை

நாகர்கோவில் நல்லையா அண்ணாவியார் விடத்தற்பளை, இசைமணி கணேசு வழிநடத்தலில் வீரகத்தியார் காசிநாதர் "சகுந்தலை" நாடகத்தில் பெண் பாத்திரமேற்று நடித்தார். தொடர்ந்து நடிகங்களில் நடித்தார். விடத்தற்பளையில் திருமணம் செய்து அங்கு வாழ்ந்ததால் விடத்தற்பளைக் கிராமத்தையும் அதை ஒட்டிய பகுதிகளிலும் கலைவளர்ச்சிக்கு கலை முயற்சிகள் செய்தார். நாடகங்களில் வரணி, கொடிகாமம், சாவகச்சேரி, மந்திகை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நவக்கிரி, ஈச்ச மேட்டை, மண்டைதீவு, கிளாவி, வேலனை, விடத்தற்பளை , எழுது மட்டுவாள், பளை, இயக்கச்சி, கிளிநொச்சி, முரசுமோட்டை, வண்ணாங்குளம், நிச்சியவேட்டை, விசுவமடு, கண்டாவளை, முல்லைத்தீவு, வவுனியா, மாங்குளம், ஒட்டுசுட்டாள், திருகோண கோட்டைக்கட்டிய குளம், அக்கராயன்குளம், முருகள், வேடன் கிருஷ்ணர், பன்குளம், மயிலிட்டி ஆகிய இடங்களில் நாடகம் நடித்தார்.

நடித்த நாடகங்கள்

  • சம்பூரண அரிச்சந்திரன் அரிச்சந்திரன், சந்திரமதி
  • சத்தியவான் சாவித்திரி சத்தியவான், இயமன்
  • ஏழுபிள்ளை நல்லதங்காள் காசிராசன்
  • கோவலன் கண்ணகி - கோவலன்
  • பட்டணத்தார் - பட்டணத்தார்
  • காத்தவராயன் - காத்தவராயன்
  • வள்ளி திருமணம் - முருகன், வேடன்
  • சத்தியபாமா - கிருஷ்ணர்
  • பவளக்கொடி
  • நல்லதம்பி

பழக்கிய இசை நாடகங்கள்

  • அரிச்சந்திர மயான காண்டம்
  • சத்தியவான் சாவித்திரி
  • பவளக்கொடி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:31 IST