under review

ஆறுமுகம்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:15, 13 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
ஆசெளச விதி

ஆறுமுகம்பிள்ளை (மகாவித்துவான் மு. ஆறுமுகம்பிள்ளை) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழறிஞர், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். இவர் எழுதிய சைவ சடங்கு நூலான ஆசௌச விதி முக்கியமான நூலாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவிலுள்ள வட்டுக்கோட்டையில் பிறந்தார். மகாவித்துவான் மு. ஆறுமுகம்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

ஆசெளச விதி புத்தகம்

சைவ அறிஞர். சைவ சமய நூல்கள் எழுதியுள்ளார். சைவத்தின் இருபத்தெட்டு ஆகமங்களில் ஆசௌச (துடக்கு தீட்டு) விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட அகோரசிவ பத்ததி என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூலில் உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாண மரபில் ஆலய உற்சவங்களும் மற்றும் கிரியைகளும் இந்த அகோரசிவ பத்ததி வழியாகவே நடத்தப்படுகின்றன. ஆறுமுகம்பிள்ளை ஆசௌச விதி என்ற நூலை எழுதினார்.

நூல்கள் பட்டியல்

விதி
  • ஆசௌச விதி (1929)

இணைப்பு

உசாத்துணை


✅Finalised Page