under review

கெளரி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 16:30, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Gowri Ammal. ‎

கெளரி அம்மாள் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

கெளரி அம்மாள் (20-ம் நூற்றாண்டின் தொடக்ககாலம்) தமிழின் தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். 'கடிவாளம்' என்பது இவரது குறிப்பிடத்தகுந்த புதினம்.

வாழ்க்கைக் குறிப்பு

தேச விடுதலை மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கௌரி அம்மாள். இவரைப் பற்றிய பிற முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தின் குறிப்பிடத்தகுந்த நாவல் எழுத்தாளர்களுள் ஒருவர். கலைமகள், குமரி மலர், மஞ்சரி போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். 'கடிவாளம்' என்பது இவரது குறிப்பிடத்தகுந்த நாவல். இதற்கு வ.ராமசாமி ஐயங்கார் முன்னுரை எழுதியுள்ளார். ’வீட்டுக்கு வீடு’ என்றநூல் இவரது சிறுகதைகளின் தொகுப்பு.

இலக்கிய இடம்

கெளரி அம்மாள் பற்றி அம்பை, "முக்கியமான எழுத்தாளர் கௌரி அம்மாள். சிறு பெண்ணாக இருந்தபோது சிறுவர்களைப்போல் உடையணிய வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டவர் . பெண்கள் வேலைக்குப் போக வேண்டும், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பண்பாடு சார்ந்த மதிப்பீடுகளை மாற்ற முடியாது என்று கருதியவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற முடியாமல் போனவர். குடும்பக் கப்பல் நிலைதடுமாறாமல் இருக்க அன்னை ஒருத்தி எவ்வளவு அவசியம் என்று கூறும் 'கடிவாளம்’ (1949) நாவலை இவர் மிகவும் நுண்ணுர்வுடன் எதையும் உரத்துக் கூறாமல் சொல்லாமல் சொல்லி விளங்கவைத்தவர். 'வீட்டுக்கு வீடு’ (1968) என்ற சிறுகதைத் தொகுதியில் பல கதைகள் மனோதத்துவ ரீதியில் சிறுமிகளுடைய மற்றும் பெண்களுடைய பிரச்சினைகளை அணுகின" என்கிறார்..

நூல்கள்

  • வீட்டுக்கு வீடு (சிறுகதைகள் தொகுப்பு)
  • கடிவாளம் (புதினம்)

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:47 IST