under review

சரஸ்வதி பாசு

From Tamil Wiki
Revision as of 16:30, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சரஸ்வதி பாசு (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

சரஸ்வதி பாசு (20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்) தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சரஸ்வதி பெரம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணமுதலியார், ஆண்டாளம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எக்ஸ்னோரா இண்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் எம்.பி. நிர்மல் இவர்களின் இளைய மகன்.

இலக்கிய வாழ்க்கை

சரஸ்வதி பாசு 'பாசரசு' என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். 'கலை’ என்ற திரைப்படம் சார்ந்த இதழை நடத்தினார். 1965-களில் 'காதம்பரி' என்ற பெண்களுக்கான இதழை நடத்தினார். கணவருடன் இணைந்து தங்களது 'பாசரசு’ காரியாலயம் மூலம் பல நூல்களை வெளியிட்டார். அவ்ற்றுள் 'கம்பதாசன் எழுதிய 'முதல் முத்தம்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. 'வசந்தம்', 'நவசக்தி' போன்ற இதழ்களில் சரசுவதி பாசுவின் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 'ஐப்பசி பெருக்கு’ என்ற சிறுகதை நவசக்தி இதழில் 1945-ல் வெளியானது.

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Mar-2023, 16:49:24 IST