under review

பொன்னாயிரங் கவிராய மூர்த்திகள்

From Tamil Wiki
Revision as of 16:26, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொன்னாயிரங் கவிராய மூர்த்திகள் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சேறைத்தலப்புராணம் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

சேற்றூரில் கனகசபாபதி பிள்ளைக்கும், அருட்பார்வைக்கும் பொ.யு. 1573-ல் மகனாகப் பிறந்தார். அவாந்திர சைவசற்சூத்திர வேளாளர் மரபு. இயற்பெயர் சிந்தாமணிப்பிள்ளை.

இலக்கிய வாழ்க்கை

சேறைத்தலப்புராணத்தை இயற்றி சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் இருந்து அரங்கேற்றினார். அரசரிடமிருந்து ஆயிரம் பொன் பரிசாகப் பெற்றார். சந்திராமுதக் கவிஞருடன் சொற்போர் செய்து வென்றார். சந்திராமுதக் கவிஞர் இவரின் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார். சேறைத்தலப்புராணம் முப்பது படலங்களையும், ஆயிரத்து நூற்று மூன்று செய்யுட்களையும் கொண்டது. உலா, புராணம், மாலை, பிள்ளைத்தமிழ், அந்தாதி போன்ற சிற்றிலக்கிய வகைமைகள் கொண்டு பாடல்கள் பாடினார்.

பாடல் நடை

சேறைத்தலப்புராணம்: திருநாட்டுப்படலம்

சொல்லு நல்வழியல்லாது துன்ப நோய்
புல்லு மலவழி சொப்பனத்தும்புகா
தொல்லு மினபவுறையுள தாய்வினை
கல்லு மாண்மறை நாட்டணி காட்டுவாம்

நூல் பட்டியல்

  • சேறைத்தலப்புராணம்
  • தென்மலைத் திரிபுரத் தீசர் புராணம்
  • புதுவை வடவாலீசர் புராணம்
  • திருக்கணீசுரர் செந்தமிழ்ப்பாமாலை
  • திருவோலக்க வெற்புமை நான்மணிமாலை
  • சேறைப் பதிற்றூப்பத்தந்தாதி
  • சேறையுலா
  • சங்கரகுமாரர் பிள்ளைத்தமிழ்
  • உபய விநாயகர் ஒளிர்மணிமாலை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Oct-2023, 10:10:05 IST