under review

வீரிருப்பு புத்த விஹாரம்

From Tamil Wiki
Revision as of 16:24, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வீரிருப்பு புத்த விஹாரம்

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தில் 100 அடியில் உயர உலக அமைதிக்கான புத்த விஹாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமம் உள்ளது. வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர் புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.

உலக அமைதிக்கான புத்த விஹாரம்

புத்த வழிபாட்டு ஆலயம்

தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக உலக அமைதிக்காக 100 அடி உயரத்தில் புத்தர் கோவில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கரன் கோயில் அருகே வீரிருப்பைச் சேர்ந்த காந்தியவாதியான சுப்பையாவின் வேண்டுகோளுக்கிணங்க புத்த கோயில் கட்டும் பணி 2000-ல் ஆரம்பிக்கப்பட்டது. புத்தர் அஸ்தி அடங்கிய கலசத்தை கோபுர உச்சியில் வைத்துள்ளனர். ஜப்பான் நாட்டிலிருந்து புத்தரின் அஸ்தி சங்கரன் கோயிலுக்கு கொணரப்பட்டு, சங்கரன் கோயில் கோமதியம்மன் கோயில் முன் உள்ள காந்தி மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

வழிபாடு

புத்த வழிபாட்டு முறை

வீரிருப்பு புத்த விஹாரத்திற்கு அருகிலேயே புத்த ஆலயம் ஒன்றுள்ளது. புத்த துறவிகள் இங்கு வணங்கும் போது "நா-மு-மியோ-ஹோ" என்ற மந்திரத்தை உச்சரித்து வணங்குகின்றனர். அனைத்து உயிர்களிடத்திலும் உள்ள இறைத்தன்யை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். தினமும் காலையும் மாலையும் 4.30 முதல் 6.30 வரை வழிபாடு நடைபெறுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 07:37:30 IST