under review

கந்தப்ப சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 16:09, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kanthappa Swami. ‎

கதிர்காமக் கலம்பகம்

கந்தப்ப சுவாமிகள் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். கதிர்காமக் கலம்பகம் எனும் சிற்றிலக்கிய நூல் முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

கந்தப்ப சுவாமிகள் இலங்கை யாழ்ப்பாணம், மேலைப்புலோவி எனும் ஊரில் பொ.யு பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்தார். சரஸ்வதி பீடம் என்னும் மடத்தின் தலைமைத் துறவியாக இருந்தார். இவர் நோயுற்று அந்நோய் குணமாக பல ஊர்களில் வழிபட்டு இறுதியில் கதிர்காமம் வந்தபோது நோய் நீங்கியது என்பது தொன்மம்.

இலக்கிய வாழ்க்கை

சைவ அறிஞர், சிற்றிலக்கியப் புலவர். கலம்பகம் எனும் சிற்றிலக்கிய வகை கொண்டு கதிர்காமக் கலம்பகம் என்ற நூலைப் பாடினார். 1897-ல் யாழ்பாணம் தமிழ்ப்பண்டிதர் நா.கதிரைவேற் பிள்ளை மெய்ப்பு நோக்கி பதிப்பித்தார். மதுரை ஆ சொக்கலிங்கப்பிள்ளை பொருளுதவி செய்தார். சென்னை மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்ப்பண்டிதர் பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்) இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் பாடினார்."கந்தப்பர் செய்த கதிர்காமக் கலம்பகத்தை சந்தமொடும் அச்சிட்டான் சால் புறவே - சந்தமுங் கந்தனடி பேணுங் கதிரவேற் பிள்ளை யெனும். அந்த தமிழ்ப் பாவாணன் இனிது ஆய்ந்து!" என்று அதில் பாராட்டினார்.

கதிர்காமக் கலம்பகம்

ஈழத்தின் கதிர்காமத்திருப்பதியில் எழுந்தருளியருள் பாலிக்கின்ற முருகப்பெருமான் மீது கந்தப்பசுவாமிகள் பாடிய பிரபந்தம் கதிர்காமக்கலம்பகம். கந்தப்ப சுவாமிகள் கொடுநோய் வந்து தன்னை வாட்டியபோது கதிர்காமம் சென்று முருகப்பெருமானை வழிபட்டு நோய்தீர்ந்ததால் இதனைப் பாடினார்.

கதிர்காமக் கலம்பகம் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்றான கலம்பக விதிக்கமைவாய் கொச்சகக் கலிப்பாவும், வெண்பாவும், கலித்துறையும் முதற் கவியுறுப்பாக முன் கூறப்பெற்று, புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம். மறம், பாண், களி , சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும் பதினெட்டு உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வெண்டுறை என்னுமிவற்றால் இடையிடையே வெண்பாவும் கலித்துறையும் விரவிவர, அந்தாதித் தொடையால் அமைந்திருக்கின்றது.

நூல்கள் பட்டியல்

கலம்பகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:21 IST