under review

பூவரசு(ஜெர்மனி)

From Tamil Wiki
Revision as of 15:54, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Puvarasugermany.jpg

பூவரசு (1991) ஜெர்மனியிலிருந்து வெளிவரும் தமிழ் இதழ். இரு மாதத்துக்கு ஒரு சஞ்சிகையாகத் தொடங்கி, தற்போது ஆண்டுக்கு இரண்டாக வெளிவருகிறது. ஆசிரியர் இந்து மகேஷ்.

தோற்றம்

பூவரசு இதழ் 1991-ல் ஜெர்மனியைக் களமாகக் கொண்டு வெளியாகத் தொடங்கி இரு மாதங்களுக்கொருமுறை வெளிவந்தது. இதன் ஆசிரியர் இந்து மகேஷ் (சின்னையா மகேஸ்வரன்).

உள்ளடக்கம்

பூவரசு சஞ்சிகை பூவரசு வாசகர் வட்ட வெளியீடாக "உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்" எனும் விழித்தொடருடன் வெளியானது. சிறுகதை, கவிதை, சமகால அரசியல் கட்டுரைகள், கலை, இலக்கிய விமர்சனம், அனுபவங்கள், புலம் பெயர்ந்த நாடுகளின் தமிழ் சார்ந்த நிகழ்வுகள் எனப் பல வகையான படைப்புகள் வெளிவந்தன. ‘மறுபடியும் நாங்கள்' போன்ற நாவல்கள் சிலவும் கையெழுத்துப் பிரதிகளாக வெளிவந்தன.

பூவரசு புலம்பெயர் மண்ணில் பல எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பலர் இதில் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினர். இதன் வாசகர்கள் இந்தியா மற்றும் பல ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

பூவரசு பல சிறப்பு மலர்கள் மற்றும் ஆண்டு மலர்களை வெளியிட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆண்டு நிறைவு விழாவுக்காக சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வென்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இருமாதத்துக்கு ஒன்றாக வெளிவந்த பூவரசு 2006 முதல் ஆண்டுக்கு இரண்டாக வெளிவந்தது.

மதிப்பீடு

பூவரசு இதழ் 1990-களில் அயல்நாடுகள் தமிழ் ஊடகங்கள் பரவலாக இல்லாத காலத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கான தமிழ் ஊடகமாக அமைந்தது. புலம்பெயர் மண்ணில் பல எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-May-2024, 09:19:23 IST