under review

வஞ்சி மாலை

From Tamil Wiki
Revision as of 15:53, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வஞ்சி மாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. வஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு பகைவர்களுடன் போர் புரிவதைப் பற்றிக் கூறுவது வஞ்சி மாலை.

வஞ்சி மாலை விளக்கம்

மண்ணாசை கொண்ட மன்னன் ஒருவன், மற்றோர் நாட்டைக் கவர்வதற்காக அந்நாட்டின் மன்னுடன் வஞ்சி மாலை சூடியவாறு போர் புரிவதைக் கூறுவது வஞ்சி மாலை.

வஞ்சி மாலை இலக்கணம்

வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று

- எனப் புறப்பொருள் வெண்பா மாலை, வஞ்சித் திணையின் இலக்கணம் கூறுகிறது.

வஞ்சியின் வகைகள்

வஞ்சி மாலை, வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி என இருவகைப்படும்.

வரலாற்று வஞ்சி

குலமுறை, பிறப்பு முதலியவற்றின் சிறப்பையும் கீர்த்தியையும் வஞ்சிப்பாவால் கூறுவது வரலாற்று வஞ்சி.

இது குறித்து முத்துவீரியம்,

விழுமிய குலமுறை பிறப்புமேம் பாட்டின்
பலசிறப் பிசையையும் வஞ்சிப் பாவால்
வழுத்தல் வரலாற்று வஞ்சியா மென்ப.

என்கிறது.

செருக்கள வஞ்சி

போர்க் களத்தில் இறந்த குதிரை, யானை போன்றவற்றின் உடலையும், மனிதர்களின் உடலையும், நாய், பேய், பிசாசு, காகம், கழுகு ஆகியன உண்டுகளித்துப் பாடிய சிறப்பைப் பாடுவது செருக்கள வஞ்சி.

இது குறித்து முத்துவீரியம்,

போர்க்களத் திறந்த புரவி நால்வாய்
மக்களுடலையும் வாயசங் கழுகு
பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக்
களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல்
செருக்கள வஞ்சியாஞ் செப்புங் காலே.

என்று குறிப்பிட்டுள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Feb-2024, 03:24:27 IST