under review

பிரான்மலை ஷைகு அப்துல்லா

From Tamil Wiki
Revision as of 14:07, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பிரான் மலை

பிரான்மலை ஷைகு அப்துல்லா புதுக்கோட்டை மாவட்டம் பிரான்மலையில் அடக்கமாகியிருக்கும் இஸ்லாமிய மதஞானி.

பிறப்பு, இளமை

ஏறத்தாழ 275 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டிலிருந்து தென்னகத்துக்கு வந்தவர் ஷைகு அப்துல்லா. அவரை பீரான் என்றும் பிரான் என்றும் அழைத்து வந்தார்கள். அதனால் அந்த இடத்தையும் பிரான்மலை என்று அழைக்கத் தொடங்கினர் என இஸ்லாமிய நம்பிக்கைகள் சொல்கின்றன.

தர்கா

காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் தர்கா அமைந்துள்ளது. திருக்கொடுங்குன்றம், பாரிமலை, பரம்பு மலை என்று பல பெயர்களில் பிரான்மலை அழைக்கப்பட்டு வந்தது. பிரான்மலைக் குன்றின் உயரம் 2500 அடி. மலையுச்சியிலுள்ள தர்கா நீண்ட காலம் திறந்த நிலையிலேயே இருந்தது. பிற்காலத்தில்தான் சுவர் அமைக்கப்பட்டது. தர்காவுக்கு நானூறு மீட்டர் கீழே ஒரு மண்டபம் உள்ளது. ஷைகு அப்துல்லா வலியுல்லாவைத் தரிசிக்கவும், நேர்ச்சையை நிறைவேற்றவும் வருபவர்கள் இந்த மண்டபத்தில்தான் தங்குகிறார்கள். பொதுவாக தர்காக்களில் இறைநேசர்களின் நினைவு விழா குறிப்பிட்ட மாதம் ஓரிரு தினங்களில்தான் நடைபெறும் ஆனால் பிரான்மலை தர்காவில் வருடம் முழுவதும் விழாக்கோலமாக இருக்கிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2023, 17:39:12 IST