under review

ஹில்டா போலார்ட்

From Tamil Wiki
Revision as of 14:05, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Hilda Polard. ‎

ஹில்டா

ஹில்டா போலார்ட் (Dr.Hilda Magaret Polard) (1883-1944) லண்டன் மிஷன் நிறுவனத்தின் மருத்துவர். ஈரோடு பகுதிகளில் பிளேக் தொற்றின்போது இலவச மருத்துவப் பணி ஆற்றியவர். போலார்டம்மா என ஈரோடு பகுதிகளில் நினைவுகூரப்படுகிறார்.

வாழ்க்கை

1914 SCHELL ஆஸ்பத்திரி வேலூர். திருமதி டியூரிக், ஹில்டா போலார்ட், ஜான் ஸ்கட்டர், ஐடா ஸ்கட்டர்

ஹில்டா போலார்ட் ஜூன் 20, 1883-ல் லண்டனில் பிறந்தார். மருத்துவப் படிப்புக்குப்பின் இந்தியா வந்து ஆற்காடு மிஷனில் மருத்துவராக 1913 முதல் 1917 வரை ஐடா ஸ்கட்டருடன் இணைந்து பணியாற்றினார்.

1917-ல் ஏ.டபிள்யூ.பிரப் அவரை ஈரோடு நகரில் தொற்றுநோய் பரவலை தடுக்கும்பொருட்டு அழைத்துவந்தார். 1917 முதல் 1944 வரை ஈரோடு லண்டன் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றினார். பிளேக் தொற்று உருவானபோது அவர் ஆற்றிய அரும்பணிகளால் போலார்டம்மா என்று அழைக்கப்பட்டார். ஈரோடு வட்டார நாட்டார் பாடல்களில் போலார்டம்மா, போலாடம்மா, போலம்மா என பல பெயர்களில் ஹில்டா குறிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:57 IST