காங்கேயர்
காங்கேயர் (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) சைவ சமயப்புலவர். உரிச்சொல் நிகண்டின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
காங்கேயர் தொண்டை மண்டலம் செங்கற்பேட்டையில் செங்குந்தர் கைக்கோளர் மரபில் பொ.யு. 14-ம் நூற்றாண்டில் பிறந்தார். சைவ சந்நியாசி. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டலப் புருடர். இவர் வாழ்ந்த காலம் கிருஷ்ண தேவராயர் காலத்திற்கு முற்பட்ட காலம்.
இலக்கிய வாழ்க்கை
காங்கேயர் உரிச்சொல் நிகண்டு என்ற அகராதியை எழுதினார். இது ஆண்டிப்புலவர் எழுதிய 'ஆசிரிய நிகண்டு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1840-ம் ஆண்டு 220 பாடல்களுடன் பாண்டிச்சேரியில் பதிப்பிக்கப்பட்டது. ‘உரிச்சொல் இருநூறு முதவு’ என்று விநாயகர் காப்பில் சொல்லப்பட்டுள்ளது. 1858-ல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பதிப்பில் 330 பாடல்கள் உள்ளன. வெண்பா அளவீடுகளைக் கொண்டு எளிதில் புரிந்துகொள்ளமாறு எழுதப்பட்டுள்ள இந்நூல் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ளது.
பாடல் நடை
- உரிச்சொல் நிகண்டு (பாடல் 1)
திருமாலுஞ் செங்கமல மேயானுங் காணாப்
பெருமான் பிறைசூடும் பெம்மா -னருண்மூர்த்தி
நன்னஞ்சி னாண்மறையோன் றில்லை நடம்புரிவே
னென்னெஞ்சின் மேய விறை
நூல் பட்டியல்
- உரிச்சொல் நிகண்டு
உசாத்துணை
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Aug-2023, 19:31:26 IST