under review

குறமகள் இளவெயினி

From Tamil Wiki
Revision as of 13:49, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குறமகள் இளவெயினி சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

குறமகள் இளவெயினி எறையூரில் பிறந்தார். குறிஞ்சி நில மக்களை எயினர், எயினி என்று அழைப்பர்.

இலக்கிய வாழ்க்கை

குறமகள் இளவெயினி புறநானூற்றில் 157-ஆவது பாடல் பாடினார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • குறவர் குடியில் பிறந்த ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறும் பாடல்.
  • கோடல் என்னும் வெண்காந்தள் மலரைத் தன் குடிப்பூவாகக் கொண்டவன் ஏறைக்கோன். இவனது மலைநாட்டில் ஆண்மான் பெண்மானை அழைக்கும் குரலைப் புலி உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கும்.
  • தமக்கு வேண்டியவர் தவறு செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளுதல், பிறர் தவறு செய்தால் அதற்காத் தான் நாணுதல், படைக்கலப் பணியில் தன் திறமையைக் காட்டுதல், வேந்தர் அவையில் பெருமிதத்துடன் நடத்தல் ஆகியவை ஏறைக்கோனின் பண்புகள்.

பாடல் நடை

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-May-2023, 18:31:55 IST