யோகம்

From Tamil Wiki
Revision as of 20:13, 12 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "யோகம்: இணைவு, தியானம், உடலைப் பயிற்றுவிக்கும் பயிற்சிகள், யோக தரிசனம் சொற்பொருள் யோகம் என்னும் சொல்லின் வேர்ச்சொல் யுஜ். அது இணைவது, ஒன்றாவது, ஆள்வது, நடத்துவது, வண்டியோட்டுவது,...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யோகம்: இணைவு, தியானம், உடலைப் பயிற்றுவிக்கும் பயிற்சிகள், யோக தரிசனம்

சொற்பொருள்

யோகம் என்னும் சொல்லின் வேர்ச்சொல் யுஜ். அது இணைவது, ஒன்றாவது, ஆள்வது, நடத்துவது, வண்டியோட்டுவது, ஏர்பூட்டுவது என்னும் பொருள் கொண்டது. போன்ற யோக என்னும் சொல்லில் இருந்து ஆங்கிலச்சொல் yoke உருவானது எனப்படுகிறது.

ஆய்வாளர்கள் யோக என்னும் சொல் ரிக்வேதத்தில் சூரிய உதயத்தை விவரிக்கையில் சூரியன் உலகை ஆள்கிறது அல்லது ஏர்பூட்டி உழுகிறது என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதுவே அச்சொல்லின் முதல் இலக்கியப் பயன்பாடு என்றும் சொல்கிறார்கள்

யோக என்னும் சொல் இன்றைய மொழிவழக்கில் ஒன்றுசேருதல், இணைந்திருத்தல், முரணியக்கம், பொதுகூட்டம், கூட்டமைப்பு என்னும் பொருட்களில் பயன்படுத்தபடுகிறது

பயன்பாடுகள்

யோகம் (தரிசனம்)

யோகம் (பயிற்சிகள்)

யோகம் (வேதாந்தம்)

யோகம் (பௌத்தம்)

யோகம் (சமணம்)