under review

ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி

From Tamil Wiki
Revision as of 08:57, 11 June 2024 by Logamadevi (talk | contribs)
ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி வெளியீடு

ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி (1908), ஜி.ஏ. வைத்தியராமன் என்பவரால், சென்னையில் தொடங்கப்பட்ட பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிறுவனம்.

தோற்றம்

ஜி.ஏ. வைத்தியராமன், 1908-ல், சென்னையில், ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி என்ற பெயரில் பதிப்பக மற்றும் புத்தக விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினார். எண் 3,4, கொண்டிச்செட்டித் தெரு, ஜார்ஜ் டவுன், மதராஸ் என்ற முகவரியிலிருந்து இந்நிறுவனம் செயல்பட்டது. பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இந்நிறுவனம் வெளியிட்டது. பிற பதிப்பகங்களின் நூல்களையும் வாங்கி விற்பனை செய்தது.

ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி வெளியீடுகள்

வெளியீடு

ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி கீழ்க்காணும் நூல்கள் உள்பட பல்வேறு நூல்களை அச்சிட்டு வெளியிட்டது.

  • ஐரோப்பிய யுத்தம்
  • தாதாபாய் நௌரோஜியின் வாழ்க்கை வரலாறு
  • ஹாஸ்ய மஞ்சரி
  • காதல் வெற்றி
  • அன்புக்கும் அழிவோ
  • பெற்ற மனம் பித்து
  • ஸஸேமிரா
  • வளையல் உடன்பாடு

மற்றும் பல.

புத்தக விற்பனை

ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி கீழ்க்காணும் நூல்கள் உள்பட பல்வேறு நூல்களை விற்பனை செய்தது.

  • விஜயஸுந்தரம்
  • கமலாக்ஷி
  • பத்மாவதி
  • அம்ருத ஸஞ்சிவினி என்னும் டாலிஸ்மன்
  • ஷண்முகஸுந்தரம்
  • ஹேமலதை
  • தானவன்
  • பத்மினி
  • விஜயகாருண்யம்
  • அனுமான்ஸிங்
  • முரளீதரன்
  • கல்யாணி
  • மதிவாணன்
  • கோமளம் குமரியானது.
  • காமாக்ஷி அல்லது ஓர் கைம்பெண்ணின் கதி
  • ராஜாமணி
  • தலையணை மந்திரோபதேசம்
  • தர்மாம்பாள் 1- ம் பாகம், 2-ம் பாகம்
  • ஹாஸ்யமஞ்சரி
  • பீமலா அல்லது திவான் மகன்
  • தீனதயாளு
  • கள்வர் கவர்ந்த கல்யாணப்பெண்
  • ஆநந்த ராமாயணம்
  • மனோஹர ராமசரித்திரம்
  • ராமசரிதமானஸம் என்னும் துளஸீ ராமாயணம், பாலகாண்டம்
  • வால்மீகி ராமாயணம் தமிழ் வசனம்
  • அத்யாத்ம ராமாயணம்
  • அற்புத ராமாயணம்
  • மஹாபாரதம் சாந்தி பர்வம்
  • விஷ்ணு புராணம் (முதல் பாகம்)
  • பாகவதம் (க்ரந்த ச்லோகங்களும் தமிழ் மொழிபெயர்ப்பும் கொண்டது)
  • பக்த மாலா வசனம்
  • பக்த விஜயம்
  • மானிட மர்ம சாஸ்திரம்
  • சாரங்கதர ஸம்ஹிதை
  • இந்துபாக சாஸ்திரம் (பெரியது)
  • ஸங்கீத சந்திரிகை
  • ஸங்கீத ரத்னாவளி
  • ராமநாடகக் கீர்த்தனை
  • மனோவசிய சாஸ்திரம்
  • ஹிப்னாடிஸம்
  • மனுதர்ம சாஸ்திரம்
  • ஸாமுத்ரிகா லக்ஷண சாஸ்திரம்
  • ரத்தினப் பிரகாசம்
  • ஹரிச்சந்த்ரன் - புது முறைப்படி
  • ஹரிச்சந்த்ரன் - புராணப்படி
  • போஜ சரித்திரம்
  • பாதுகா பட்டாபிஷேகம்
  • சீதா கல்யாணம்
  • கலாவதி
  • ஸகுந்தலை அல்லது காணாமல்போன கணையாழி
  • ரூபாவதி
  • கண்ணகி
  • லீலாவதி ஸுலோசனை
  • புஷ்பவல்லி
  • சத்ருஜித்
  • விஜயரங்கம்
  • நந்தனார்
  • ஹரிச்சந்த்ரன்
  • வாஸத்திகை
  • காந்தாமணி
  • தெய்வமணி அல்லது காதலர் கபடம்
  • ரஜபுத்ரவீரன்
  • சீசகன் அல்லது. கற்பின் வெற்றி
  • முற்பகல் செய்யில் பிற்பகல் விளையும்
  • பிரஹசனங்கள்
  • ஸுதர்ம கலாவதீயம்
  • ஸத்ய ஹரிச்சந்த்ரன்

மதிப்பீடு

ஜி.எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, தமிழின் முன்னோடிப் பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையங்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page