being created

கச்சிப்பிள்ளையம்மாள்

From Tamil Wiki
Revision as of 02:09, 10 June 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "கச்சிப்பிள்ளையம்மாள் இஸ்லாமிய ஞானி, கவிஞர். மெஞ்ஞானமாலை == வாழ்க்கைக் குறிப்பு == கச்சிப்பிள்ளையம்மாள் இளையான்குடியில் பிறந்தவர். தந்தை லுக்மான். சகோதரர் முஹம்மது மீறான் மஸ்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கச்சிப்பிள்ளையம்மாள் இஸ்லாமிய ஞானி, கவிஞர். மெஞ்ஞானமாலை


வாழ்க்கைக் குறிப்பு

கச்சிப்பிள்ளையம்மாள் இளையான்குடியில் பிறந்தவர். தந்தை லுக்மான். சகோதரர் முஹம்மது மீறான் மஸ்தான். திருப்பரங்குன்றம் மலைமீது அடக்கம் செய்யப்பட்ட சிக்கந்தர் வலி மீது பக்தி கொண்டவர் எனக் கூறப்படுகிறது. கச்சிப்பிள்ளையம்மாள் இளம் வயதிலேயே ஞானம் உடையவராக இருந்தார். அதனால் ’மெஞ்ஞான சொரூபி’ என்று போற்றப்பட்டார். இஸ்லாமியம் சார்ந்து பல பக்திப்பாடல்களை இயற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சியப்பிள்ளையம்மாள் இஸ்லாமியம் சார்ந்து பல பக்திப்பாடல்களை இயற்றினார். அவர் பாடிய பாடல்கள் 'மெய்ஞ்ஞான மாலை' என்ற பெயருடன் பொ.யு. 1918-ம் ஆண்டில் அச்சாகி வெளிவந்திருக்கின்றன.அதில் மெய்ஞ்ஞானமாலை, மெய்ஞ்ஞானக்குறவஞ்சி, மெய்ஞ்ஞான ஊஞ்சல், மெய்ஞ்ஞானக்கும்மி ஆகியவை அடங்கியுள்ளன. சூஃபி ஞானிகளின் மரபுப்படி ஜீவாத்மாவைக் காதலானாகவும் பரமாத்மாவைக் காதலியாகவும் உருவகப் படுத்திப் பாடுகின்றார்.

அதில் அவர் தம்மை 'கல்வி அறிவில்லாத கச்சிப்பிள்ளளை' என்று அடக்கமாகக் குறிப்பிட்டிருந்த போதினும் அவருடைய நூலுக்கு சாற்றுக்கவி வழங்கிய அவருடைய சமகாலத்துப் புலவர்கள் அவருடைய மாண்பினைப் பெரிதும் போற்றிப் புகழ்கின்றனர்.

புலவர் சீனியாவல் ராவுத்தரோ "நங்கை கச்சிப்பிள்ளையம்மாள் பாடல் மாயைத் துயிலகல மெய்ஞ்ஞான முறை புகட்டி வேதாந்தச் சோதிகாட்டக் கயிலுலவும் நவநீதமாகும்" என்று புகழ்கின்றார். பண்டித சையிது அப்துல்காதிரோ "அன்னையிலும்

தயவு அதிகமுள்ள கச்சிப்பிள்ளையம்மாள் அன்புகூர்ந்து தன்னையும் தன் தலைவனையும் அறிவதற்கு முக்கிய சாதனமாய்ச் சாற்றும் இன்னமுத மனையதிரு மெய்ஞ்ஞான மாலையைப்போல் யார் சொல்வாரே"

அதில் தம்முடைய மெய்ஞ்ஞான மாலையை அறுக்கும் வாள் என்று கூறியிருப்பது படித்து ரசிக்கத் தக்கதாகும். அந்த வெண்பா வருமாறு :

அல்லாஹு என்றே அகிலமெல்லாம் போற்றுகின்ற

வல்லானை எந்நாளும் வாழ்த்துவமே - பொல்லாத

அஞ்ஞான மாயை அறுத்தொதுக்கும் வாளனைய

மெய்ஞ்ஞான மாலைசொல்ல வே.

உசாத்துணை

சூஃபி ஞானி கச்சிப்பிள்ளையம்மாள் அகமதியம்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.