under review

சந்தோஷ் சரவணன்

From Tamil Wiki
Revision as of 08:54, 8 June 2024 by Santhosh (talk | contribs)

Testing some alert

To read the article in English: Santhosh Saravanan. ‎


Santhosh Saravanan.jpg

சந்தோஷ் ( பிறப்பு: ஜூன் 2, 1992) தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஒருங்கிணைப்பாளர். ஜெயமோகன் - விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணையதளங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்.

பிறப்பு, கல்வி, தொழில்

சந்தோஷ் (பிறப்பு ஜுன் 2, 1992) சென்னை தாம்பரத்தில் சரவணன்-மாலதி இணையருக்குப் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரி, நந்தினி. சந்தோஷின் குடும்பம் தெருக்கூத்து குழுக்களுக்கு புகழ்பெற்ற புரிசை (திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்) கிராமத்தை சேர்ந்தது.

சந்தோஷ் பள்ளிக்கல்வியை சென்னை, கேரளா, புது தில்லி ஆகிய இடங்களில் பெற்றார். சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டமும், திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கழகத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்தார். நிதித்துறை நிறுவனங்களில் பணியாற்றினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதம் தத்துவம்-மதம்-பண்பாட்டு துறையில் முதுகலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆலோசக உளவியல் பட்டமும் பெற்றார்.

தொண்டு நிறுவனங்களில் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு, தற்போது சென்னையில் பூமி என்ற தொண்டு நிறுவனத்தில் முழுநேர பணியாற்றுகிறார்

ஒருங்கிணைப்பு பணிகள்

கடந்த பல வருடங்களாக ஜெயமோகன் தளம், மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குழுவினரின் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு ஒருங்கிணைத்து வருகிறார்.

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தில் நீண்டகால திட்டமிடல், உள்ளடக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் பங்கெடுக்கிறார்.


✅Finalised Page