எட்டு ரகசியங்கள்
From Tamil Wiki
எட்டு ரகசியங்கள் : வைணவ மரபில் முதன்மை மந்திரங்களின் உட்பொருளைக் கூறும் நூல்கள் ரகசியங்கள் எனப்படுகின்றன. அவற்றில் எட்டு நூல்கள் முக்கியமானவை.
மூன்று மந்திரங்கள்
வைணவ மதத்தில் பாஞ்சராத்ர மரபில் மூன்று மந்திரங்கள் முக்கியமானவை. அவை மந்திரத்ரயம் எனப்படுகின்றன. அவற்றின் ரகசியப்பொருளைப் பேசும் நூல்கள் ரகசியம் என அழைக்கப்படுகின்றன