சாங்கியம்

From Tamil Wiki
Revision as of 16:03, 5 June 2024 by Jeyamohan (talk | contribs)

சாங்கியம்: (சாங்க்யம்,ஸாங்க்யம்) இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. இந்து மரபில் வேதத்தை முதன்மையாகக் கொள்ளாத அவைதிக மரபின் முதன்மைச் சிந்தனை.

தரிசனங்கள்

பிரபஞ்சத்தின் தோற்றம், பிரபஞ்சத்தின் செயல்பாடு, வாழ்க்கையின் அடிப்படைகள், துயரத்தில் இருந்து மீளும் வழி ஆகிய அடிப்படைகளை முன்வைக்கும் பார்வையை பொதுவாக தரிசனம் (தர்சனம்) என்று இந்திய தத்துவநூல்கள் சொல்கின்றன. அவ்வாறு முழுமையான பார்வை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கோணத்தை மட்டுமே முன்வைப்பவை வாதம் (தர்க்கமுறை) எனப்படுகின்றன. இவற்றில் தனக்கென வழிபாட்டு முறையும், தெய்வங்களும், குருமரபு மற்றும் குலமரபுகளும் உள்ள தரிசனங்கள் காலப்போக்கில் மதம் ஆக மாறின. வைணவம், சைவம் ஆகியவை மதங்கள். அவ்வாறன்றி தரிசனமாகவே நின்றுவிட்டவை தொடர்ந்து தரிசனம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டன. அவற்றில் தொன்மையானது சாங்கியம்

இந்து மரபில் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் என ஆறு தரிசனங்கள் உண்டு என வேதாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை ஷட்தர்சன எனப்படுகின்றன. ஆறு மதங்கள் என்றும் இவை சில நூல்களில் கூறப்படுவதுண்டு.

சொற்பொருள்

சாங்கியம் என்னும் சொல் சங்கியா (எண்ணிக்கை) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. எண்ணிக்கை, கணிப்பு, தர்க்கம் ஆகிய பொருட்கள் இச்சொல்லுக்கு உண்டு. தொல்காலத்தில் நம்பிக்கைக்கு எதிரான தர்க்கநிலைபாடுகளில் இதற்கு முதலிடம் இருந்திருக்கிறது.

ஆசிரியர்

சாங்கிய தரிசனத்தின் ஆசிரியர் கபிலர் . இவர் வைதிக மரபுக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த ஞானி என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார்.

காலம்

தொன்மையான சிந்தனைகளின் காலகட்டத்தை அறுதியாகக் கணிப்பது கடினமானது. அந்தச் சிந்தனைகளிம் மூலநூல் என பிற்காலத்தில் மதிப்பு பெற்ற நூல் உருவான காலகட்டத்தையே அவற்றின் தோற்றம் உருவான காலம் என பொதுவாகக் கணிக்கிறார்கள்.

தோற்றுவாய்

சாங்கிய தரிசனம் இந்திய மரபின் மிகத்தொன்மையான தத்துவப்பார்வை என்று பொதுவாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரிச்சர்ட் கார்பே “மானுடசிந்தனையில் முதல்முறையாக கபிலரின் தத்துவத்திலேயெ மானுட உள்ளத்தின் முழுமையான சுதந்திரமும் தன் சிந்தனையின் ஆற்றல் மீதான முழுமையான நம்பிக்கையும் வெளிப்படுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

ஹென்றிஸ் ஸிம்மர் “கிட்டத்தட்ட வரலாறு தொடங்கும் காலகட்டத்திலேயே, இருபத்துநான்கு தீர்த்தங்காரர்களுக்கு முன்னரே, வேதங்கள் அல்லாத மரபில் இருந்து சாங்கியம் உருவாகி வந்திருக்கிறது” என்று கருதுகிறார்

வரலாறு

தத்துவம்

செல்வாக்கு

சிந்தனைமரபில் இடம்

உசாத்துணை