ஶ்ரீனிவாச மகி

From Tamil Wiki
Revision as of 19:17, 4 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஶ்ரீனிவாச மகி (Sreenivasa-makhin) ஶ்ரீநிவாஸ மஹி, ஶ்ரீநிவாஸ மகின்: வைணவ ஆசிரியர். வைணவத்தின் வைகானஸ மரபின் முதன்மையான உரையாசிரியர்களில் ஒருவர். வைகானஸத்தை நிறுவும்பொருட்டு என்னும் நூலை இய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஶ்ரீனிவாச மகி (Sreenivasa-makhin) ஶ்ரீநிவாஸ மஹி, ஶ்ரீநிவாஸ மகின்: வைணவ ஆசிரியர். வைணவத்தின் வைகானஸ மரபின் முதன்மையான உரையாசிரியர்களில் ஒருவர். வைகானஸத்தை நிறுவும்பொருட்டு என்னும் நூலை இயற்றினார். ஶ்ரீனிவாச அத்வாரி, ஶ்ரீனிவாச தீட்சிதர் என்றும் அழைக்கப்படுகிறார்

காலம்

ஶ்ரீனிவாச மகி நிருசிம்ஹ வாஜபேயி, பட்ட பாஸ்கரர் என்னும் வைகானஸ ஆகமவல்லுநர்களுக்கு பின் வந்தவர். ஆகவே அவர் பொயு 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிறப்பு, கல்வி

வைகானசத்தின் வேதாந்த தேசிகர் என்று அழைக்கப்படும் ஶ்ரீனிவாஸ மகி கௌசிக கோத்திரத்தில் வைகானஸ பிராமண குடியில் கோவிந்தாச்சார்யா- ருக்மிணியம்மா ஆகியோரின் மகனாக தற்போதைய திருமலை திருப்பதியான வேங்கடாச்சலத்தில் (வரசகிரி)யில் பிறந்தார். பாரம்பரிய முறைப்படி வைகானஸ ஆகமங்களில் பயிற்சி பெற்றார்

தனிவாழ்க்கை

திருமலை- திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் பூசகராகப் பணியாற்றினார்.

மதப்பணி

உசாத்துணை