பௌஷ்கரம்

From Tamil Wiki

பௌஷ்கரம் : வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் எனப்படுகின்றன. பத்மசம்ஹிதையில் பாஞ்சராத்ர ஆகமம் குறிப்பிடப்படுகிறது.

காலம்

பௌஷ்கர சம்ஹிதை பொயு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

பௌஷ்கர சம்ஹிதை பாஞ்சராத்ர சம்ஹிதைகளில் கிட்டத்தட்ட எல்லா சடங்குகளையும் குறிப்பிடும் முழுமையான நூல் என்று கருதப்படுகிறது. 9000 பாடல்கள் கொண்டது இது.

உசாத்துணை

பௌஷ்கர சம்ஹிதை- விஸ்டம் ட்ரீ இணையப்பக்கம்