under review

குறம்

From Tamil Wiki

குறம் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தில் குறத்தி குறி கூறுவதைக் கூறும் உறுப்பு. காலப்போக்கில் குறம் என்னும் சிற்றிலக்கிய வகைமையாக உருப்பெற்றது. குறவஞ்சி என்னும் தனிவகைச் சிற்றிலக்கியமாகவும் விரிந்தது.

கலம்பகத்தில் குறம்

கலம்பகத்தில் குறம் அகத்துறை சார்ந்த உறுப்பு. தலைவியின் கை நோக்கி குறத்தி குறி சொல்வதாக அமையும் பகுதி

குறமும் குறவஞ்சியும்

குறத்தி குறி சொல்லும் பகுதியை மட்டும் கூறுவதே குறம். இந்தக் குறம் என்னும் பகுதிக்கு மட்டும் தனியொரு சிற்றிலக்கியமாகத் தோன்றியதே குறம் என்னும் சிற்றிலக்கியம். குறத்தில், குறத்திப் பாட்டு மட்டுமே இருக்கும். குறவஞ்சியில் வேறு பல கூறுகளும் அமையும்.

குறம் நூல்கள்

குறம் என்ற தலைப்பில் நூல்கள் பல கிடைத்துள்ளன. இந்த நூலின் இலக்கணம் பற்றி எந்த நாட்டிய நூலும் கூறவில்லை. குறத்தி குறி கூறும் நிலையில் இது அமையும். முதல் குறம் நூலாக குமரகுருபரர் எழுதிய மதுரை மீனாட்சியம்மை குறம் திகழ்கிறது.

திரௌபதைக் குறம், மின்னொளியாள் குறம், திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக் குறம் போன்றவை இவ்வகைமையில் இயற்றப்பட்ட பிற நூல்கள்

உசாத்துணை


✅Finalised Page