being created

ப. பாண்டியராஜா

From Tamil Wiki
Revision as of 22:43, 1 June 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பேராசிரியர், முனைவர் ப. பாண்டியராஜா

ப. பாண்டியராஜா (முனைவர் ப. பாண்டியராஜா) (பிறப்பு: ஏப்ரல் 30, 1943) தமிழ் மற்றும் கணினித் துறை அறிஞர். கல்வெட்டு ஆய்வாளர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணிதத் துறைத் தலைவராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றினார். இலக்கிய நூல்கள் சிலவற்றுக்கு எளீய உரைகளை எழுதினார். கணிதவியல் சார்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.இணையத்தில் சங்க இலக்கிய அருஞ்சொற்களஞ்சியத்தை உருவாக்கினார். சங்க இலக்கியம், காப்பியங்கள் தொடங்கி பல்வேறு இலக்கிய நூல்களுக்கு தமிழ் இலக்கியத் தொடரடைவுகளை உருவாக்கினார்.

பிறப்பு, கல்வி

ப. பாண்டியராஜா, ஏப்ரல் 30, 1943 அன்று, மதுரை மாவட்டம் (இன்றைய தேனி மாவட்டம்) சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியில், ப.பரமசிவம்-ஞா.பொன்னுத்தாய் இணையருக்குப் பிறந்தார். ஓடைப்பட்டி, பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மதுரை பசுமலை உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். மதுரை, தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் கணிதத்தில் இளம் அறிவியல் மற்றும் முது அறிவியல் (B.Sc., M.Sc.) பட்டங்களைப் பெற்றார்.

முதுகலை தமிழ் (எம்.ஏ), ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), மொழியியலில் சான்றிதழ் பட்டங்களைப் பெற்றார். சிஸ்டம்ஸ் அனாலிசிஸ் மற்றும் டேட்டா பிராசஸிங்கில் (Dip. in SA & DP) டிப்ளமோ பட்டம் பெற்றார். கணினிப் பயன்பாடுகளில் முதுகலைப் பட்டயம் பெற்றார். (PGDCA). தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ‘எழுத்துத் தமிழில் மொழியியல் அம்சங்களின் புள்ளியியல் பகுப்பாய்வு- தொல்காப்பியத்திலிருந்து தொடங்கி நவீன காலம் வரையிலான மொழியியல் அம்சங்களின் டயக்ரோனிக் மற்றும் சின்க்ரோனிக் ஆய்வு.' (Statistical Analysis of Linguistic Features in written Tamil-A diachronic and synchronic study of linguistic features starting from Tolkappiyam and up to modern times) என்ற தலைப்பில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ப. பாண்டியராஜா, மணமானவர். மனைவி, சு.வனஜா ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர். மகள்கள்: பொன் எழில் நிவேதிதா, பொன் மலர் சங்கீதா.

கல்விப் பணிகள்

ப. பாண்டியராஜா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில், 1964 - 1965 வரை கணித ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து கணித விரிவுரையாளர், கணிதவியல் பேராசிரியர், கணிதத் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து 2001-ல் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.