வால்புரூக் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 14:42, 31 May 2024 by Aravink22 (talk | contribs) (Created page with "thumb|196x196px|பள்ளிச்சின்னம் வால்புரூக் தோட்டத் தமிழ்ப்பள்ளி பேராக் மாநிலத்தின் சித்தியவான் வட்டாரத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். சைம் டர்பி நிறு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பள்ளிச்சின்னம்

வால்புரூக் தோட்டத் தமிழ்ப்பள்ளி பேராக் மாநிலத்தின் சித்தியவான் வட்டாரத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். சைம் டர்பி நிறுவனத்துக்குட்பட்ட வால்புரூக் தோட்டத்தில் இப்பள்ளி அமைந்திருக்கிறது. வால்புரூக் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் கல்வியமைச்சின் பதிவெண் ABD1086.

பள்ளி வரலாறு

வால்புரூக் தோட்டத்தமிழ்ப்பள்ளி 1917 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு வரையில் திரு வடிவேலு எனும் ஒராசிரியரைக் கொண்டே பள்ளி இயங்கிவந்தது. வால்புரூக் தோட்டத்தைச் சுற்றிலும் இருக்கும் சுங்கை வாங்கி, சங்காட் மெராந்தி, கம்போங் தெபோக், ஆயர் தாவார் நகரம் ஆகிய பகுதிகளிலிருந்த மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றனர். 1957 ஆம் ஆன்டு திரு முனுசாமி பள்ளியின் தலைமையாசிரியராய்ப் பொறுப்பேற்றதும் மாணவர்களுக்கான சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டட வரலாறு

தொடக்கக்காலத்தில் வகுப்பறையாக மாற்றியமைக்கப்பட்ட வீடொன்றிலே பள்ளி செயற்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு மூன்று வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் எழுப்பப்பட்டது.2008 ஆம் ஆண்டு ரி.ம 197,000 வெள்ளி செலவில் இரண்டு வகுப்பறைகளும் கழிப்பறைகளும் கொண்ட இணைக்கட்டடம் கட்டப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கூடுதலாக இரண்டு அறைகள் கட்டப்பட்டன. 2011 ஆம் ஆண்டு ரி. ம 672,890 வெள்ளி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கத்தொடங்கியது

தற்காலம்

வால்புரூக் தோட்டத்தமிழ்ப்பள்ளி 1.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு கட்டடங்களுடன் இயங்கி வருகிறது.

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Ladang Walbrook
Ladang Walbrook
32000, Sitiawan
Perak

உசாத்துணை

பள்ளி இதழ், 2019

200 ஆண்டுகள் மலேசியத் தமிழ்க்கல்வி மேம்புகழ், 2016