பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 14:30, 31 May 2024 by Aravink22 (talk | contribs) (Created page with "thumb|210x210px|பள்ளிச்சின்னம் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இருக்கும் பத்தாங் காலி தோட்டத்தில் அமைந்திருக்கும...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பள்ளிச்சின்னம்

பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இருக்கும் பத்தாங் காலி தோட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண் BBD5041.

பள்ளி வரலாறு

பத்தாங் காலி தமிழ்ப்பள்ளி 1947 இல் தொடங்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 25 மாணவர்கள்தாம். 1956 ஆம் ஆண்டு கோல குபு பாரு வட்டாரத்தில் இருந்த தமிழ்ப்பள்ளியும் பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பத்தாங் காலி தமிழ்ப்பள்ளியின் செயற்பட்டுக்காக ரி.ம 25,000 செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. 1961 ஆம் ஆண்டு பள்ளி வாரியத் தலைவரும் தோட்ட நிர்வாகியுமான திரு ஜே.ஏ.போஸ்டரின் முயற்சியால் பெறப்பட்ட ரி.ம 16,000 ஐ கொண்டு இணைக்கட்டடம் கட்டப்பட்டது. 1968 ஆம் ஆண்டு பள்ளிக்கு நீர் வசதியும் 1974 ஆம் ஆண்டு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டது. 1981 ஆம் ஆண்டு தலைமையாசிரியர் அலுவலகம், ஆசிரியர் அறை, வைப்பறை, கழிப்பறை ஆகியவை கொண்ட இணைக்கட்டடம் எழுப்பப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இரு மாடிகளைக் கொண்ட பள்ளிக்கான புதிய கட்டடத்தில் பள்ளி செயற்படத் தொடங்கியது.

பள்ளிக்கட்டடம்

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Ladang Batang Kali

Ladang Batang Kali

பள்ளிக் கட்டடம் அண்மைத்தோற்றம்

Selangor, Malaysia

உசாத்துணை

200 ஆண்டுகால தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக் கல்வி அமைச்சு, 2016