ரா.கணபதி

From Tamil Wiki
Revision as of 08:35, 25 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ரா.கணபதி (1-செப்டெம்பர்1935 – 20, பெப்ருவரி-2012)) தமிழில் இந்து பக்தி எழுத்துக்களை எழுதியவர். இதழாளர்.   == பிறப்பு,கல்வி == ரா.கணபதி சிதம்பரத்தைச் சேர்ந்த வி.இராமச்சந்திர ஐயருக்கும் கடலூர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ரா.கணபதி (1-செப்டெம்பர்1935 – 20, பெப்ருவரி-2012)) தமிழில் இந்து பக்தி எழுத்துக்களை எழுதியவர். இதழாளர்.  

பிறப்பு,கல்வி

ரா.கணபதி சிதம்பரத்தைச் சேர்ந்த வி.இராமச்சந்திர ஐயருக்கும் கடலூரைச்சேர்ந்த  ஜெயலட்சுமிக்கும் மகனாக பிறந்தார். தந்தை கணிதத்தில் ஹானர்ஸ் பட்டம்பெற்று பிரிட்டிஷ் அரசில் அதிகாரியாக பணியாற்றியவர்.

சென்னை இந்து  சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை மாநில (பிரசிடென்சி) கல்லூரியிர் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

ரா.கணபதி கல்கி இதழில் எழுதிய ஜயஜய சங்கர என்னும் நூல் இவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சத்ய சாய்பாபா, சுவாமி விவேகானந்தர், அன்னை(சாரதா தேவி) ரமண மகரிஷி யோகி ராம்சுரத்குமார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகலை எழுதினார். இவருடைய தனிப்பெரும் படைப்பு என ‘தெய்வத்தின் குரல்’ கருதப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக இவர் கல்கியில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியின் அருளுரைகளை தெய்வத்தின் குரல் என்ற பேரில் தொடராக வெளியிட்டார். பின்னர் அவற்றை தெய்வத்தின் குடல் என்னும் பேரில் 7 தொகுதிகளாக வெளியிட்டார்.

மெயில் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி இருக்கிறார். பின்னர் கல்கி இதழின் உதவி ஆசிரியர் ஆனார். ராஜாஜியின் சுயராஜ்யா இதழிலும் பணிபுரிந்தார்.