being created

ஆகமம்

From Tamil Wiki

ஆகமம்: இந்திய மதப்பிரிவுகளின் வழிபாடு, தத்துவம், மறைஞானம் ஆகியவற்றை வகுத்துரைக்கும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. சைவம், வைணவம், சாக்தம் ஆகியவற்றுக்கு ஆகமங்கள் உண்டு. பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கும் அவற்றுக்கான ஆகமங்கள் உள்ளன.

சொற்பொருள்

ஆகமம் என்னும் சொல் ஆ+கமம் என பிரிந்து ‘வந்தமைந்தது’ என்று பொருள் கொள்கிறது. இறைவனை அழைப்பவை என்றும் பொருள் கொள்வதுண்டு.

வெவ்வேறு நூல்களில் ஆகமங்களை அறிஞர்கள் பலவகைகளிலும் பொருள் அளித்து விளக்கியுள்ளனர். உதரணமாக, சைவநூல்களில் ஆ (பாசம்) க (பசு) ம் (பதி) என விளக்குவதுண்டு. அவ்விளக்கங்களை கருத்தேற்றம் என்றே கொள்ளவேண்டும்.

மொழி

ஆகமங்கள் சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ளன. அவை தமிழ் உட்பட வெவ்வேறு மொழிகளில் இருந்து சம்ஸ்கிருதத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்டவை என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

காலம்

ஆகமங்களின் காலம் வரையறை செய்யப்படவில்லை. அவை வெவ்வேறு காலங்களில் உருவானவை எனப்படுகிறது. இந்தியாவெங்கும் ஆலயவழிபாடு பொயு 4 ஆம் நூற்றாண்டிற்குப்பின் குப்தர் காலத்தில் பரவி வலுப்பெற்றது. ஆகமங்கள் முன்னரே வழிபாட்டு நெறிகளாக புழங்கியவையாக இருக்கலாம். ஆலயவழிபாடு பரவலான போது அவை முறையாக சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம். ஆகமங்கள் பொயு 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டு முதல் பொயு 14 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டும், புதியதாக எழுதி தொகுக்கப்பட்டும் உருவாகிக்கொண்டே இருந்தன என எஸ்.என்.தாஸ்குப்தா குறிப்பிடுகிறார்

வியாசபாரதம்

வியாசபாரம் சாந்தி பர்வத்தில் வைணவ ஆகமமான பாஞ்சராத்ர ஆகமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை பொ.யு எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் சேர்க்கப்பட்டவை என ஆய்வாளர் கருதுகின்றனர்.

திருமூலர்

தொல்நூல்களில் ஆகமங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கொண்ட நூல் திருமூலர் இயற்றிய திருமந்திரம். பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல்வீரம் உயர் சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமலள ஆகும் காலோத்தரம்

துற நல் சுப்பிரம் சொல்லும் மகுடமே ( திருமந்திரம் 62)

என்னும் பாடலில் காரணம், காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம், யாமளம் காலோத்தரம், சுப்ரபேதம், மகுடம் என்னும் ஒன்பது ஆகமங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகிறது.

அஞ்சனமேனி அரிவையோர் பாகத்தான்

அஞ்சோடிருப்பத்து மூன்றுள ஆகமம் (திருமந்திரம்57 )

என்னும் வரியில் 28 ஆகமங்கள் உள்ளன என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

கல்வெட்டு

இரண்டாம் நரசிம்மவர்மன் இராஜசிம்மன் (ச. கி. பி. 695-722) பொறித்த சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் அவ்வரசனுக்கு ஏறக்குறைய இருநூற்றைம்பது விருதுகள் இருப்பதைச் சொல்கின்றன. அவற்றுள் சங்கரபத்தன், ஆகமப்பிரியன் என்பவை முக்கியமானவை. இராஜசிம்மன் சிவபக்தனாகவும் ஆகமங்களை பேணுபவனாகவும் இருந்தான் என தெரியவருகிறது

சமயம்

ஆகமங்கள் சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களில் உள்ளன எனப்படுகிறது. எவை பிறராலும் அம்மதத்தாராலும் ஆகமங்களாகக் கருதப்பட்டன என்பதை ஒட்டியே இந்த பகுப்பு செய்யப்படுகிறது

பௌத்தம்

பௌத்தத்திலுள்ள மூன்று நூல்தொகைகள் அம்மதத்தின் ஆகமங்கள் எனப்படுகின்றன. இவை திரிபிடகம் எனப்படும்

  • சுத்தபிடகம்
  • வினயபிடகம்
  • அபிதம்ம பிடகம்

என இவை நூல்களில் பகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சமணம்

சமணத்தில் ஜினாகமம், ஜினதந்திரம் என இரு வகைகளாக ஆகமங்கள் குறிப்பிடப்படுகின்றன

  • அங்காகமம்
  • பர்வே ஆகமம்
  • பகுஸ்ருதி ஆகமம்

என ஆகமங்கள் சமணத்தில் மூன்று தொகைகளாக உள்ளன.

சாக்தம்

சாக்த மதத்தின் ஆகமங்கள் 77 எனப்படுகின்றன. இவை மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன

சுபா

சுபாகமம் என்பது முனிவர்களின் பெயருடன் வழங்கப்படும் நூல்கள். வாய்மொழிச்சொற்கள் என பொருள்.

  • வசிஷ்ட ஆகமம்
  • ஜனக ஆகமம்
  • சுக ஆகமம்
  • சனந்த ஆகமம்
  • சனத்குமார ஆகமம்

கௌளா

கௌளாகமம் 64 ஆகமங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இது வங்கநிலத்தில் உருவானது எனப்படுகிறது

மிஸ்ரா

மிஸ்ராககம் 8 நூல்தொகைகளைக்கொண்டது. கலவையான ஆகமம் என இதன் பொருள்

அமைப்பு

ஆகமம் நான்கு பாகங்கள் கொண்டது. சரியை, கிரியை,யோகம் , ஞானம். இவை பாதங்கள் எனப்படுகின்றன

சரியா பாதம்

வழிபடுபவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகள். பிறப்பு, தீட்சை, இறப்பு ஆகியவற்றுக்கான சடங்குகள் இப்பகுதியில் சொல்லப்படுகின்றன

கிரியா பாதம்

ஆலயம் அமைப்பது, ஆலயவழிபாட்டு முறைகள் இப்பகுதியில் சொல்லப்படுகின்றன. ஆலயம் அமைக்க இடம் தெரிவு செய்தல், ஆலயம் அமைக்கும் முறைமைகள், ஆலயத்தின் வடிவம், ஆலயத்தின் துணையமைப்புகளின் வடிவம், ஆலய தெய்வங்கள் நிறுவப்படும் முறை, ஆலயதெய்வங்கள் வழிபடப்படும் முறை ஆகியவை இவற்றில் காணப்படும்

யோக பாதம்

யோகச்செயல்பாடுகளின் பொருட்டு உடலையும் உள்ளத்தையும் பழக்குதல் இப்பகுதியில் பேசப்படுகிறது. ஆறுவித ஆதாரங்கள், பிராணயாமம் போன்ற பயிற்சிகள், குண்டலினியை எழுப்பும் வழிமுறைகள், அகத்தூய்மை செய்தல் ஆகியவை இப்பகுதியில் பேசப்படுகின்றன.

ஞான பாதம்

மதங்களின் மெய்யியல்கொள்கைகளின் விளக்கங்கள் ஞானபாதத்தில் உள்ளன. உதாரணமாக, சைவ ஆகமங்களில் பசு-பதி-பாசம் பற்றிய விவரணைகள் காணப்படும்

உசாத்துணை

திருமந்திரம் ஆகமம் பாயிரம் திருமந்திரம் பாடல் 63

பல்லவர் வரலாறு, தமிழ்வு



, தந்திரம், மகாதந்திரம், சம்மிதை, சிவஞானம் ஆகிய சொற்களால் குறிப்பிடப்படுகின்றன

ஆகமங்கள்


தந்திரம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.