under review

பூவரசு(இலங்கை இதழ்)

From Tamil Wiki
Revision as of 09:18, 27 May 2024 by Logamadevi (talk | contribs)
Puvarasu.jpg

பூவரசு(மார்ச் 1996) இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ஒரு காலாண்டு கலை இலக்கிய இதழ். இரு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.

தொடக்கம்

பூவரசு காலாண்டிதழ் மார்ச் 1996-ல் தொடங்கப்பட்டு வெளிவந்தது. இதன் ஆசிரியர் சாருமதி, வாசுதேவன். இது மட்டக்களப்பின் ஜெஸ்கொம் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

உள்ளடக்கம்

பூவரசு ஒரு கலை இலக்கிய இதழாக வந்தது. சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இதில் அக்காலத்தில் நிலவிய நவீன கலை இலக்கியம் சார்ந்த, விமர்சன ரீதியாக கட்டுரைகள், கவிதைகள், நவீன பெண்ணியவாதக் கருத்துக்கள் இடம்பெற்றன. இது இரண்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது.

உசாத்துணை


✅Finalised Page