ஜயந்தி திஸாநாயக்க
ஜயந்தி திஸாநாயக்க ஈழத்துப் பெண் வயலின் கலைஞர். இசைத்துறை சார்ந்த இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜயந்தி திஸாநாயக்க இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார். 1985-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலை பிரிவில் இசைக் கலைமணி பட்டம் பெற்றார். 2002-ல் இசைப்பட்டதாரியாக ஆனார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். முதுநுண்கலைமாணிப் பட்டம் பெற்றார்.
இசை வாழ்க்கை
1998 முதல் கிழக்கிலங்கையில் தரமான நிகழ்வுகளையும் கலைஞர்களையும் இணைத்துச் செயற்படும் நிகழ்த்து கலைக்கழகமான 'விமோசனா' அமைப்பின் துணை இயக்குனராக இருந்தார். இது கலை ஆர்வம் மிகுந்த ஒரு குழுவினரின் ஒருங்கிணைப்பாகத் திகழ்ந்தது. பிரபல இசை வித்துவான்களுக்கு பிரபல நடனக் கச்சேரிகளுக்கும் 1989-ம் ஆண்டில் இருந்து வயலின் அனுசரணைக் கலைஞராக உள்ளார்.
எழுத்து
ஜயந்தி திஸாநாயக்க இசைத்துறை சார்ந்த இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். ”வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி” எனும் நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.